முட்டை உற்பத்தியில் ஒளியின் பங்கு
கோழிகளின் முட்டை உற்பத்தியானது அவைகளுக்குக் கிடைக்கும் ஒளியின் அளவு, மற்றும் ஒளி கிடைக்கும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்தது. கோழிகளின் பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதியினை ஒளி தூண்டுவதால், எஃப் எஸ் எச் மற்றும் எல் எச் எனும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. ஒளியானது கோழிகளின் மண்டைஓடு, தோல், இறகுகளை ஊடுருவுகிறது. எஃப் எஸ் எச் ஹார்மோன் கோழிகளின் கருமுட்டைப் பையில் கருமுட்டைகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. பிறகு முதிர்ச்சியடைந்த கருமுட்டை எல் எச் ஹார்மோனின் செயல்பாட்டால்கருமுட்டையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
ஒளியினைப் பற்றிய தகவல்கள்
கேண்டலா எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட அளவு ஒளியினை ஒரு திசையில் செலுத்தும் போது கிடைக்கும் ஒளியாகும்.
லூமன்
ஒரு சதுர அடி இடத்தில், ஒரு அடி தூரத்திலிருந்து ஒளியானது விழும் போது கிடைக்கும் ஒளியின் அளவு
ஃபுட் கேண்டில்
ஒரு இடத்தில் விழும் ஒளியின் அளவினை புட் கேண்டில் எனும் அலகால் அளக்கலாம்.
லக்ஸ்
ஒரு லக்ஸ் ஒளி அளவு என்பது ஒரு அடியில் விழும் ஒரு லூமன் ஒளியின் அளவினைப் பொருத்தது.
1 foot candle = 10.76 lux
ஒளியின் வகைகள்
கோழிப்பண்ணையில் உபயோகிக்கப்படும் நான்கு ஒளி வகைகளாவன:
கோழிப்பண்ணையில் விளக்குகள் அமைக்கப்படுவதைப் பொறுத்து அவற்றின் செயல்திறன் இருக்கும். கோழிக்கொட்டகைகளில் விளக்குகளைப் பொறுத்தும் போது கீழ்க்கண்ட முக்கியமான விசயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
வளரும் பருவத்தில் கோழிகளுக்கு அளிக்கப்படும் வெளிச்சத்தினைக் குறைப்பதால் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
முட்டை உற்பத்தி செய்யும் பருவத்தில் வெளிச்சத்தினால் ஏற்படும் பயன்பாடுகள்
கோழிக்கொட்டகையில் பகலில் அதிக நேரம் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொண்டால், கோழிகளின் உடலில் எஃப் எஸ் எச் மற்றும் எல் எச் ஹார்மோன்கள் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரந்து முட்டைகளின் உற்பத்தி அதிகரிக்கும். ஒளியின் வெளிச்சத்தின் அளவு அதிகமாக இருந்தாலும் முட்டை உற்பத்தி அதிகரிக்கும். நடைமுறையில், ஒரு புட் கேண்டில் ஒளி அடர்த்தி முட்டைக்கோழிக் கொட்டகையில் தேவைப்படும்.பல அடுக்கு கூண்டு முறைக் கோழி வளர்ப்பில் கீழ் அடுக்கில் உள்ள கோழிகளுக்கு 0.5 புட் கேண்டில் அளவு வெளிச்சம் தேவைப்படும். அதிக பட்ச முட்டை உற்பத்திக்கு, கோழிகளின் அதிகபட்ச முட்டை உற்பத்தி செய்யும் வயதில் தினமும் 16 மணி நேரம் வெளிச்சம் தேவைப்படும்.காலையிலும், மாலையிலும், அல்லது இரண்டு வேளைகளிலும் செயற்கை வெளிச்சம் கோழிகளுக்கு அளிக்கலாம்.
வளரும் மற்றும் முட்டையிடும் பருவத்திற்கு சேர்ந்து வெளிச்சம் அளித்தல்
கோழிகளுக்கு வெளிச்சம் அளிக்கும் போது நினைவில் கொள்ளப்பட வேண்டிய இரண்டு முக்கிய விசயங்கள் பின்வருமாறு:
இயற்கையான வெளிச்சம் குறைவாக உள்ள கால நிலைகளில் கோழிகள் வளர்க்கப்படும் போது, அவற்றின் கடைசி வளர்ச்சி சுழற்சி நிலை இன்சீசன் ஃப்ளாக்ஸ் எனப்படுகிறது. பொதுவாக பூமியின் வடக்கு அரை வட்டத்தில் மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை பொரிக்கும் கோழிக்குஞ்சுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
அவுட் சீசன் ஃப்ளாக்ஸ்
கோழிக் குஞ்சுகள் செப்டம்பர் 1 முதல் 28 பிப்ரவரி வரை பொரிப்பவை இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த காலங்களில் சூரிய வெளிச்சம் காலஅளவு அதிகமாகி கொண்டே போகும்.
திறந்த பக்கங்கள் கொண்ட வளர்கோழி மற்றும் முட்டைக் கோழிபண்ணைகளில் ஒளி மேலாண்மை
a) இன் சீசன் ஃப்ளாக்ஸ்
செயற்கை வெளிச்சம் 20 வாரங்கள் வரை கோழிக்களுக்கு தேவைப்படாது. ( கறிக்கோழிகளுக்கு 22 வாரங்கள் வரை ). 20 வார காலத்தில் வெளிச்சம் 13 மணி நேரம் இருக்குமாறு அமைக்கவேண்டும். பிறகு வாரம் ஒரு மணி நேரம் என தினம் 16 மணி நேரம் அடையும் வரை அதிகரிக்கவேண்டும்.
b) அவுட் சீசன் ஃப்ளாக்ஸ்
இரண்டு வகையான முறையில் பராமரிக்கப்படுகிறது.
i) நிலையான ஒளி நாள் அமைப்பு
வளர்க்கோழிகள் 20 வாரத்தை அடையும் போது அதன் இயற்கை ஒளியின் அளவை கண்டறியவேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரம் ஒளியின் அளவை அதிகரித்து ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மொத்த ஒளி நேரம் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
ii) குறைக்கும் ஒளி நாள் அமைப்பு
வளர்க்கோழிகள் 20 வாரத்தை அடையும் போது அதன் இயற்கை ஒளியின் அளவை கண்டறியவேண்டும்.பிறகு 7 மணி நேரம் சேர்க்கவேண்டும். வாரம் 20 நிமிடங்கள் ஒளி நாள் குறைக்கவேண்டும். வாரம் ஒரு மணிநேரம் ஒளி அளவை அதிகரித்து தினம் 16 மணி நேரம் அடையவேண்டும்.
ஒளி தூண்டப்படாதது
ஒளி தூண்டப்படாதது என்பது நீண்ட ஒளி அளவுகளுக்கு கோழிகள் தூண்டப்படாதது. ஒளி தூண்டப்படாதது அதிகமான ஒளிநாள் கோழிகளில் குறைந்த முட்டை உற்பத்தி ஏற்படுத்துகிறது.
மாறுபட்ட ஒளி அமைப்புகள்
இந்த அமைப்பில் மொத்த ஒளி நேரம் 24 மணிநேரமாக இருக்காது.இதில் இரண்டு வகைகள் உள்ளன. நீண்ட நாள் ( 14 மணி நேரம் வெளிச்சம் + 14 மணி நேரம் இருட்டு ) குறுகிய நாள் ( 11 மணி நேரம் வெளிச்சம் + 11 மணி நேரம் இருட்டு ). நீண்ட நாள் அமைப்பில் முட்டை ஓட்டின் தரம் அதிகமாகிறது. அதேபோல் குறுகிய நாள் அமைப்பில் முட்டை உற்பத்தி 2 சதவீதம் அதிகரிக்கிறது. ஆனால் இந்த அமைப்பு தினசரி வேலை முறைகளில் பொருந்தாது. இதற்கு ஒளி புகாத கோழிக்கொட்டகைள் தேவைப்படும்.
மேலே செல்க
கோழிகளின் முட்டை உற்பத்தியானது அவைகளுக்குக் கிடைக்கும் ஒளியின் அளவு, மற்றும் ஒளி கிடைக்கும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்தது. கோழிகளின் பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதியினை ஒளி தூண்டுவதால், எஃப் எஸ் எச் மற்றும் எல் எச் எனும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. ஒளியானது கோழிகளின் மண்டைஓடு, தோல், இறகுகளை ஊடுருவுகிறது. எஃப் எஸ் எச் ஹார்மோன் கோழிகளின் கருமுட்டைப் பையில் கருமுட்டைகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. பிறகு முதிர்ச்சியடைந்த கருமுட்டை எல் எச் ஹார்மோனின் செயல்பாட்டால்கருமுட்டையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
ஒளியினைப் பற்றிய தகவல்கள்
-
ஒளியின் அலை நீளம் 400 – 700 நேனோ மீட்டர் இருந்தால் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
-
குறைந்த அலை நீளமுடைய ஒளியை விட அதிக அலை நீளமுடைய ஒளி (சிவப்பு) மூளையினை விரைவில் அடையும்.
-
சூரிய ஒளியின் அடர்த்தி கீழ்க்கண்ட காரணங்களால் மாறுபடுகிறது:
- சூரியினின் அமைப்பு
- மேகமூட்டம்
- காற்றிலுள்ள ஈரப்பதம் மற்றும் தூசின் அளவு
-
பகலிலுள்ள வெளிச்சம், சூரியனுக்கு நேராக உள்ள பூமியின் அமைப்பினைப் பொறுத்தது
-
பூமியின் வடக்குப்பகுதியில்
- ஜூன் மாதம் 21 – வருடத்தின் நீண்ட நாள்
- டிசம்பர் 21 – வருடத்தின் குறைவான நாள்
- (In southern hemisphere it is reversed)
-
சூரியன் உதிப்பதற்கு 15-30 நிமிடத்திற்கு முன்னால் வெளிச்சம் வரும். அதே போல் சூரிய அஸ்தமத்திற்கு 15-30 நிமிடங்களுக்கு முன்னால் இருட்டத் தொடங்கி விடும். எனவே சூரிய உதயத்திற்கும், சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் உள்ள காலம் ஒரு ஒளி நாள் எனப்படும்.
ஒளியுடன் சம்பந்தப்பட்ட வார்த்தைகள்
கேண்டெலா (Candle)கேண்டலா எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட அளவு ஒளியினை ஒரு திசையில் செலுத்தும் போது கிடைக்கும் ஒளியாகும்.
லூமன்
ஒரு சதுர அடி இடத்தில், ஒரு அடி தூரத்திலிருந்து ஒளியானது விழும் போது கிடைக்கும் ஒளியின் அளவு
ஃபுட் கேண்டில்
ஒரு இடத்தில் விழும் ஒளியின் அளவினை புட் கேண்டில் எனும் அலகால் அளக்கலாம்.
லக்ஸ்
ஒரு லக்ஸ் ஒளி அளவு என்பது ஒரு அடியில் விழும் ஒரு லூமன் ஒளியின் அளவினைப் பொருத்தது.
1 foot candle = 10.76 lux
ஒளியின் வகைகள்
கோழிப்பண்ணையில் உபயோகிக்கப்படும் நான்கு ஒளி வகைகளாவன:
-
இன்கேண்டசன்ட் – விலை மலிவானவை, ஒளி எதிரொளிப்பான்கள் தேவைப்படும், இந்த வகை பல்புகள் குறைவான நாட்களே உழைக்கும் (750-1000 மணி நேரம்).
-
ஃபுளோரசன்ட் – இன்கேண்டசன்ட் பல்பினை விட ஃபுளோரசண்ட் பல்புகள் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். இது இண்கேண்டசன்ட் பல்பை விட 10 மடங்கு உழைக்கும் தன்மையுடையவை
-
மெர்குரி ஆவி பல்புகள் – இவை நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடியவை (24000 மணி நேரம்), சூடாவதற்கு சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். தாழ்வான கூரைகளை உடைய கொட்டகைகளுக்கு இந்த வகைக் கூரைகள் ஏற்றவை அல்ல.
-
காம்பேக்ட் ஃபுளோரசன்ட் பல்புகள் – இவை குறைவான அளவு சக்தியினை உபயோகித்து அதிக ஒளியினை அளிக்கவல்லவை. 5 புளோரசண்ட் பல்புகளை உபயோகிப்பதால் கிடைக்கும் ஒளி ஒரு காம்பேக்ட் புளோரசண்ட் பல்பை உபயோகிப்பதால் கிடைக்கும்.
கோழிப்பண்ணையில் விளக்குகள் அமைக்கப்படுவதைப் பொறுத்து அவற்றின் செயல்திறன் இருக்கும். கோழிக்கொட்டகைகளில் விளக்குகளைப் பொறுத்தும் போது கீழ்க்கண்ட முக்கியமான விசயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
-
கோழிகளிடமிருந்து விளக்குகளுக்கு இருக்கும் தூரத்தில் 1.5 மடங்கு தூரம் இரண்டு விளக்குகளுக்கு இடையில் இருக்க வேண்டும்.
-
கோழிக்கொட்டகையின் வெளிப்புற விளிம்புக்கும் விளக்குகளுக்கும் இடையிலுள்ள இடைவெளி, இரண்டு விளக்குகளுக்கு இருக்கும் இடைவெளியில் பாதியளவு இருக்கவேண்டும்.
-
கூண்டு முறையில் கோழி வளர்க்கும் கொட்டகையில், விளக்குகளிலிருந்து வரும் வெளிச்சம் தீவனத்தட்டுகளின் மீது படுமாறு விளக்குகளைப் பொருத்த வேண்டும்.
-
சுத்தமான ஒளி எதிரொலிப்பான்கள் கோழிகளின் அளவில் 50% வரை எதிரொளிக்கின்றன.
-
கூம்பு வடிவ ஒளி எதிரொளிப்பான்களை உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும். தட்டையான வட்ட விளிம்புடன் கூடிய ஒளி எதிரொளிப்பான்களை உபயோகிக்கலாம்.
-
ஆழ்கூள முறை கோழிக்கொட்டகைகளில், விளக்குகளை 7-8 அடி உயரத்தில் பொருத்த வேண்டும். ஆனால் கூண்டு முறை கோழிக் கொட்டகைகளில் நடைபாதைக்கு மேல் பொருத்த வேண்டும்.
-
ஒயர்கள் கொண்டு பல்புகளைக் கோழிக்கொட்டகைகளில் தொங்க விடுவதைத் தடுக்க வேண்டும்.
-
அழுக்கான விளக்குகள், சுத்தமான விளக்குகளை விட 1/3 பங்கு ஒளியை மட்டுமே வெளிவிடும்.
-
எனவே ஒளி விளக்குகளை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நன்றாகத் துடைக்க வேண்டும்.
வளரும் பருவத்தில் கோழிகளுக்கு அளிக்கப்படும் வெளிச்சத்தினைக் குறைப்பதால் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
- இனப்பெருக்க முதிர்ச்சி அடையும் வயது அதிகரிக்கும்
- முதல் பாதி முட்டை உற்பத்தி காலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
- முதலில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் எடை அதிகமாக இருக்கும்
முட்டை உற்பத்தி செய்யும் பருவத்தில் வெளிச்சத்தினால் ஏற்படும் பயன்பாடுகள்
கோழிக்கொட்டகையில் பகலில் அதிக நேரம் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொண்டால், கோழிகளின் உடலில் எஃப் எஸ் எச் மற்றும் எல் எச் ஹார்மோன்கள் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரந்து முட்டைகளின் உற்பத்தி அதிகரிக்கும். ஒளியின் வெளிச்சத்தின் அளவு அதிகமாக இருந்தாலும் முட்டை உற்பத்தி அதிகரிக்கும். நடைமுறையில், ஒரு புட் கேண்டில் ஒளி அடர்த்தி முட்டைக்கோழிக் கொட்டகையில் தேவைப்படும்.பல அடுக்கு கூண்டு முறைக் கோழி வளர்ப்பில் கீழ் அடுக்கில் உள்ள கோழிகளுக்கு 0.5 புட் கேண்டில் அளவு வெளிச்சம் தேவைப்படும். அதிக பட்ச முட்டை உற்பத்திக்கு, கோழிகளின் அதிகபட்ச முட்டை உற்பத்தி செய்யும் வயதில் தினமும் 16 மணி நேரம் வெளிச்சம் தேவைப்படும்.காலையிலும், மாலையிலும், அல்லது இரண்டு வேளைகளிலும் செயற்கை வெளிச்சம் கோழிகளுக்கு அளிக்கலாம்.
வளரும் மற்றும் முட்டையிடும் பருவத்திற்கு சேர்ந்து வெளிச்சம் அளித்தல்
கோழிகளுக்கு வெளிச்சம் அளிக்கும் போது நினைவில் கொள்ளப்பட வேண்டிய இரண்டு முக்கிய விசயங்கள் பின்வருமாறு:
- வளரும் கோழிகளுக்கு வெளிச்ச நாள் அளவு நீட்டிக்கப்படக்கூடாது.
- முட்டையிடும் கோழிகளுக்கு வெளிச்ச நாள் அளவினைக் குறைக்கக்கூடாது.