Thursday, March 3, 2016

நாட்டுக் கோழி பண்ணை அமைப்பதற்கு, அரசின் சார்பில் 50 சதவீத மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக் கோழி பண்ணை அமைப்பதற்கு, அரசின் சார்பில் 50 சதவீத மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்தது:
 திண்டுக்கல் மாவட்டத்தில் 240 நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைப்பதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
 இத்திட்டத்தன் கீழ் தனி நபர்கள், சுயஉதவிக் குழுவினர், விவசாயிகள் பயன்பெறலாம். மேலும், கோழிப் பண்ணைக்கு கொட்டகை அமைப்பதற்குத் தேவையான செலவில் 25 சதவீதத்தினை தமிழக அரசும், நாட்டுக்கோழிகள் வாங்குவதற்கான செலவில் 25 சதவீதத்தினை நபார்டு வங்கியும் வழங்குகின்றன.
 மீதி 50 சதவீத பங்கினை, பயனாளிகள் தங்கள் சொந்த செலவிலோ, வங்கிக் கடன் மூலமாகவோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
 அதேபோல, நாட்டுக்கோழி பண்ணையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கோழிக்குஞ்சுகள் வாங்குவதற்கான செலவில் 2 ஆவது தொகுப்பில் 50 சதவீதமும், மூன்றாவது தொகுப்பில் 30 சதவீதமும் மானியமாக தமிழக அரசு வழங்குகிறது.
 ஒரு பண்ணைக்கு 250 நாட்டுக்கோழிகள் வீதம், இத்திட்டத்தின் கீழ் அமைத்துக் கொள்ளலாம்.
 கோழிப்பண்ணைகள் அமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு தங்கள் பெயரிலோ, குடும்ப உறுப்பினர் பெயரிலோ சொந்தமான  நிலம் இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், ஏற்கனவே கொட்டகை அமைத்துள்ளவர்கள், புதிய கொட்டகைகள் அமைக்கவும்,  தற்போது இருக்கும் பண்ணைகளை விரிவாக்கம் செய்ய விருப்பம் உள்ளவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
 தேர்வு செய்யப்படும் 240 பேர்களுக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலை. பயிற்சி மையத்தில் 5 நாள்கள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை உதவி  மருத்துவரை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9445001114 என்ற எண்ணில் மண்டல இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.