Thursday, March 10, 2016

கோழிகளைப் பற்றிய பொதுவான தகவல்கள்


இனம் இளம் வயது வயது முதிர்ந்த கோழிகள்
சேவல் பெட்டை
கோழி கோழிக்குஞ்சு சேவல் பெட்டைக்கோழி
வாத்துகள் வாத்துக்குஞ்சு டிரேக் வாத்து
வான்கோழி பவுல்ட் டாம் வான்கோழி
காடை காடைக் குஞ்சு காடை சேவல் காடைக்கோழி
கினிக்கோழி கீட் கினிசேவல் கினிக்கோழி
கூஸ் வாத்து கூஸ்லிங் கேன்டர் கூஸ்
புறா ஸ்குவாப் ஆண் புறா பெண் புறா
அன்னம் சிக்னெட் ஆண் அன்னம் பெண் அன்னம்

பல்வேறு கோழியினங்களின் அடை காக்கும் காலம், குரோமோசோம்களின் எண்ணிக்கை, இனப்பெருக்க முதிர்ச்சியடையும் காலம்
வ.எண் இனம் அடை காக்கும் காலம் (நாட்களில்) குரோமோசோம்களின் எண்ணிக்கை( இரட்டையில்) இனப்பெருக்க முதிர்ச்சியடையும் வயது (வாரங்களில்)
1. கோழி 21 39 18-20
2. வாத்து 28 40 28-30
3. மஸ்கோவி 33-35 40 28-30
4. கூஸ் 28-32 40 28-30
5. கினிக்கோழி 27-28 39 28-32
6. வான்கோழி 28 40 28-30
7. காடை 17-18 39 6-7
8. புறா 18 39 10-12
9. ஆஸ்ட்ரிச் 42 40 52
10 ஈமு 52-55 40 52

கோழிகளின் இனங்கள்
கோழியினங்கள் பொதுவாக நான்கு முக்கியமான பெரிய இன வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.        

  • அமெரிக்க கோழியினங்கள்
  • ஆசிய கோழி இனங்கள்   
  • ஆங்கில கோழி இனங்கள்  
  • மத்திய கோழி இனங்கள்
வகை அமெரிக்கன் ஆசிய இனங்கள் ஆங்கில இனங்கள் மத்திய கோழி இனங்கள்
தாடி இறகுகள் அற்றது இறகுகள் உடையது இறகுகள் அற்றது இறகுகள் அற்றது
தோல் நிறம் மஞ்சள் மஞ்சள் வெள்ளை மஞ்சள் அல்லது வெள்ளை
காது மடல் நிறம் சிவப்பு சிவப்பு சிவப்பு வெள்ளை
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் இறைச்சிக்காக இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் முட்டைக்காக
Size நடுத்தரம் பெரியவை நடுத்தரம் சிறியவை
முட்டை ஓட்டின் நிறம் பழுப்பு பழுப்பு பழுப்பு வெள்ளை
உதாரணங்கள் 1) ரோட் ஐலேண்ட் ரெட்
2)பிளை மவுத் ராக்
3)நியூ ஹேம்ப்ஷையர்
4)வியன்டோட்
1) )பிரம்மா
2) கொச்சின்
3) லாங்ஷான்
1) கார்னிஷ்
2) அஸ்ட்ரா லார்ப்
3) டார்க்கிங்
4) ஆர்பிங்டன்
5) சசெக்ஸ்
1) லெகார்ன்
2) மைனார்க்கா
3) அன்கோனா
4) ஆன்டலூசியன்

கோழிகள் அவற்றின் உபயோகத்திற்கேற்ப கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
1) முட்டைக்கோழி இனங்கள் - Eg.வெள்ளை லகார்ன், மைனார்கா, அன்கோனா
2) இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.கார்னிஷ்,பிளை மவுத் ராக், பிரம்மா
3) இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.ரோட் ஐலேண்ட் ரெட்,நியூ ஹேம்ப்ஷையர்
4) விளையாட்டுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.அசீல்
 5) அழகுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg. சில்க்கி, ஃபிரிசில்டு, பேந்தம்ஸ்
 6) உள்நாட்டின கோழியின இனங்கள் - Eg. கடக்நாத், நேக்ட் நெக், சிட்டகாங்.
மேலே செல்க

இந்திய கோழியினங்கள்

        இந்தியாவில் நான்கு தூய கோழியினங்கள் உள்ளன. அவையாவன. அசீல், சிட்டகாங், பர்சா மற்றும் கடக்நாத்
1. அசீல்:

C-Aseel1 C-Aseel2

  1. அசீல் இனம் அதன் உடற்கட்டு, வலிமையான உடல் திறன் மற்றும் சண்டையிடும் திறன் போன்றவற்றிற்காக புகழ் பெற்றவை.
  2. அசீல் கோழி இனத்தின் பிரபலமான வகைகளாவன, பீலா (தங்க நிறமுடைய சிவப்பு), யாகப் (கருப்பு மற்றும் சிவப்பு), நியூரி (வெள்ளை), காகர் (கருப்பு), சிட்டா (கருப்பில் வெள்ளை நிறப் பொட்டுகள்), ஜாவா (கருப்பு), சப்ஜா (வெள்ளை மற்றும் தங்க நிறம் அல்லது கருப்பு கலந்த மஞ்சள் நிறம் அல்லது வெள்ளி), டீகார் (பழுப்பு), ரேசா (இளஞ்சிவப்பு), பீ கோம்ப் எனும் கொண்டை அமைப்பு, நல்ல சிவப்பு நிறமுடைய தாடி மற்றும் காது மடல்கள், நீண்ட கழுத்து, பலமான கால்கள்.
2. சிட்டகாங்:
C-Chittagong1 C-Chittagong2

  1. சிட்டகாங் கோழியினம் மலாய் என்றும் அறியப்படும்.
  2. இந்த கோழியினம் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகிறது.
  3. சிட்டகாங் இனத்தின் பிரபல வகைகளாவன, பஃப், வெள்ளை, கருப்பு, அடர்ந்த பழுப்பு, சாம்பல் நிறம்.
  4. பீ கொண்டை, சிவப்பு காது மடல்கள், நீண்டு தொங்கும் கண் இமைகள், இறகுகள் அற்ற கொண்டைகள்.
3. கடக்நாத்:
C-Kadaknath1 C-Kadaknath2
  1. கடக்நாத் கோழியினத்தின் தோல், அலகு, தாடி, கால் விரல்கள் மற்றும் பாதம், போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும்.
  2. இக்கோழியினத்தின் கொண்டை, தாடி, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
  3. இந்த கோழியினத்தின் உட்புற உறுப்புகள் அடர் கருப்பு நிறத்திலும், அதன் தசைகள், தசை நார்கள், நரம்புகள், மூளை கருப்பு நிறத்தில் இருக்கும். கருப்பு நிறம் மெலனின் நிறமி கலந்திருப்பதால் கருப்பு நிறம் இருக்கும்.
4. பர்சா:
Busra1 Busra2
  1. பர்சா இனம் நடுத்தர உடல் வாகுடைய, இலகுவான எடையுடைய, எப்போதும் கவனுத்துடன் உஷாராக இருக்கும்.
  2. இவற்றின் முட்டையிடும் திறன் குறைவு.
  3. இவற்றின் தோல் நிறம் வேறுபடும்.
குறிப்பு :
  1. அர்க்கானா அமெரிக்க கோழி இனமாகும். இக்கோழி இனங்கள் ஊதா, அல்லது பச்சை நிறத்தில் முட்டைகளை இடுகின்றன.
  2. ஆசீல் சண்டையிடும் திறன் வாய்ந்த உள்நாட்டின கோழியினமாகும்
  3. ஆசியன் இன கோழியினத்தில், இறகுகள் தலையினை நோக்கி சுருண்டிருக்கும்
  4. சில்க்கி ஆசியாவைச் சேர்ந்த கோழியினமாகும். இவ்வினத்தின் அடைகாக்கும் திறன் அதிகம்.
  5. வெள்ளை லகார்ன் கோழியினம் முட்டையிடுவதற்கு மிகவும் ஏற்ற மிகவும் பிரபலமான இனமாகும்.
கலப்பின கோழியினங்கள்
          இந்த கோழியினங்கள் பல்வேறு விதமான தூய கோழினங்களை இரண்டு, மூன்று மற்றும் நான்கு முறை கலப்பினம் செய்து உருவாக்கப்படுகின்றன. இவை வணிக ரீதியாக முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றின் முட்டையிடும் மற்றும் வளரும் திறன் அதிகம். இவற்றின் கலப்பின வீரியம் அதிகம்.

1) பொதுவாக முட்டைக்காக வளர்க்கப்படும் கலப்பின கோழியினங்கள் :
பிவி 300, ஐஎஸ்எ பாப்காக், போவன்ஸ், யூரிபிரீட், ஹைலைன், டெகால்ப், லோமேன், கீஸ்டோன், எச் & என் நிக் சிக் போன்றவை.

2) பொதுவாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் கலப்பின கோழியினங்கள் :
காப், ராஸ், ஹப்ரோ, ஹப்பார்ட், ஸ்டார்புரோ,ஏவியன் 34, அனாக் 2000, ஆர்பர் அக்ர்ஸ், ஹப் சிக்ஸ், பீட்டர்சன் போன்ற இதர இனங்கள்
கோழியினங்களின் கொண்டைகளின் பல்வேறு வகைகள்
கோழிகளின் தலையின் மேல் பகுதியிலுள்ள சதைப்பகுதி அதன் கொண்டையாகும். கோழிகளின் இனத்திற்கேற்றவாறு அவற்றின் கொண்டை அமைப்பு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். கோழிகளின் கொண்டை அமைப்பு அவற்றின் மரபுப்பண்புகளைப் பொறுத்து இருக்கும். ஆனால் கொண்டையின் அளவு அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியைப் பொறுத்தும், எவ்வளவு ஒளியில் அவை வளர்க்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தும் இருக்கும். பல்வேறு வகையான கோழிகளின் கொண்டை அமைப்புகள் பின்வருமாறு.

1) தனியான கொண்டை அமைப்பு:
கோழிகளின் கொண்டை அமைப்பானது, அதை முன்னாலிருந்து பார்க்கும் போது குறுகியதாகவும், அதிலிருந்து கொம்புகள் போன்று நீட்டிய அமைப்புகளும் இருக்கும். அதாவது ஒரு பிளேடு போன்ற தட்டையான அமைப்பில் விளிம்புகளுடன் கூடிய கோழிகளின் தலை மீது இருக்கும் சதைப்பகுதி அதன் கொண்டையாகும். கோழிகளின் கொண்டையிலுள்ள கத்தி போன்ற வெட்டுப்பட்ட அமைப்புகளின் எண்ணிக்கை கொண்டைகளின் வகைக்கேற்ப மாறுபடும். மேலும் கோழிகளின் கொண்டையிலுள்ள இந்த அமைப்புகள் கோழிகளின் இனத்திற்கேற்ப வேறுபடும். வெள்ளை லகான் கோழிகளின் கொண்டையில் 5 வெட்டுப்பட்ட அமைப்புகளும், ஆர்ஐஆர் மற்றும் மைனார்கா இனக் கோழிகளின் கொண்டைகளில் 6 வெட்டு அமைப்புகளும் இருக்கும். ரோஸ் மற்றும் பீ கொண்டை அமைப்புகளின் கீழ்ப்பட்ட கொண்டை அமைப்பு தனிக் கொண்டை அமைப்பாகும்.

2) பீ எனும் கொண்டை அமைப்பு
இந்த கொண்டை அமைப்பு மூன்று கொண்டை அமைப்பாகும். அதாவது மூன்று தனிக்கொண்டைகள் அவற்றின் அடிப்பகுதியில் சேர்ந்தது போலும், மேற்பகுதியில் மூன்றாக பிரிந்து இருப்பது பீ எனும் கொண்டை அமைப்பாகும். இந்த மூன்று கொண்டைகளில் நடுவிலுள்ள கொண்டை மற்ற இரண்டை விடப் பெரியதாக இருக்கும். சுத்தமான பிரம்மா கோழி இனங்களில் இந்த வகைக் கொண்டை அமைப்பு இருக்கும்.

3)ரோஸ் கொண்டை
இக் கொண்டை அமைப்பு அகன்ற கொண்டையாக, அதன் மேற்பகுதியில் தட்டையாகவும் சிறிய செவ்வக வடிவ அமைப்புகளும் இருக்கும். இந்த செவ்வக வடிவ கத்தி போன்ற அமைப்புகளின் நீளமும் அகலமும் கோழிகளின் இனத்திற்கேற்ப மாறுபடும்.
Eg. வியன்டோட்

4) ஸ்ட்ராபெரி அல்லது வால்நாட் கொண்டை அமைப்பு
இந்த வகைக் கொண்டை அமைப்பு ஸ்ட்ராபெரி பழத்தின் அரைப்பகுதி போன்று இருக்கும். கொண்டையின் மேற்பகுதி ஸ்ட்ராபெரி பழத்தின் மேற்பகுதி போன்று இருக்கும். இது சிறியதாகவும் அவற்றின் மேற்பகுதியில் ஒழுங்கற்ற கோடுகள் போன்ற அமைப்புகள் இருக்கும். ரோஸ் மற்றும் பீ கொண்டை உடைய கோழிகளை கலப்பினம் செய்யும்போது கிடைக்கும் கலப்பினக் கோழிகள் அனைத்தும் வால்நட் கொண்டையினைப் பெற்றிருக்கும். இதற்கு ஆர் மற்றும் பி ஜீன்களின் சேர்ந்த வெளிப்பாடாகும்.
Eg. மலாய்ஸ் கோழி இனம்
5) வி வடிவ கொண்டை அல்லது டியூப்லெக்ஸ் அல்லது கொம்பு வடிவ கொண்டை
இந்தக் கொண்டை கொம்பு போன்று இருக்கும். ஆனால் பொதுவாக இந்த கொண்டை அமைப்பு ஆங்கில எழுத்து 'வி' போன்று இருக்கும். இந்த கொண்டையானது கோழிகளின் அலகிலிருந்து ஆரம்பித்து இரண்டாக பிரிந்து, அதன் அடிப்பகுதியில் தடிமனாகவும், மேல் பகுதியில் கூர்மையாக, மெல்லியதாகவும் இருக்கும். Eg. ஹூண்டன்ஸ் கோழியினம்.

6) குஷன் கொண்டை
இந்த கொண்டை அமைப்பு உருண்டையான சதை அமைப்புடன் அதன் மீது கூர்மையான அமைப்புகள் இருக்கும். இக்கொண்டையின் மத்தியில் நீண்ட பள்ளம் காணப்படும் Eg.சில்க்கி கோழியினம்.

7) குவளை போன்ற கொண்டை
இந்த கொண்டை அமைப்பு ஒரு தேநீர் குவளையைப் போன்று அதன் விளிம்புகளில் கத்தி போன்ற அமைப்புகள் இருக்கும் Eg. சிலிக்கன் பட்டர்கப் இனம்.

கோழிகளைக் கையாளுவதற்கான தேவை
  1. கோழிகளுக்கு நோய் ஏற்பட்டிருப்பதை கண்டறிய
  2. கோழிகளை தேர்ந்தெடுப்பதற்கும், பண்ணையிலிருந்து நீக்குவதற்கும், அவற்றின் திறனை அளவிடவும்
  3. தடுப்பூசி அளிக்கும்போதும், பரிசோதனையின் போதும், கோழிகளுக்கு அடையாளங்களை இடுவதற்கும், அலகினை வெட்டுவதற்கும், கொண்டையினை வெட்டுதற்கும், செயற்கை முறை கருவூட்டல் செய்வதற்கும், தனித்தனியாக கோழிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும்
  4. கோழிகளின் வெளிப்புற உடல் அமைப்பைப் பற்றி படிப்பதற்கு
  5. கோழிகளை விற்கும்போது அவற்றைப் பிடிப்பதற்கு
கோழிகளைக் கையாளுதல்
மேற்கூறிய செயல் முறைகளுக்காக கோழிகளை அவை ஆழ்கூளத்தரையில் வளர்க்கப்பட்டால் அவற்றைப் பிடிக்கவும், கூண்டு முறைகளில் வளர்க்கப்பட்டால் அவற்றை கூண்டுகளை விட்டு வெளியே எடுக்கவும் வேண்டும்.
ஆழ்கூள முறையில் கோழிகளைப் பிடிக்கும் போது அவற்றைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தும் கொக்கிகளை அவற்றின் காலில் போட்டோ அல்லது அவற்றின் கால்களை நம் கைகளால் பிடித்தோ தூக்கவேண்டும். கோழிகளை எப்போதும் அவற்றின் கழுத்தைக் கொண்டோ அல்லது இறகுகளைப் பிடித்தோ தூக்கக்கூடாது. அவற்றுக்கு மருந்து அளிப்பது போன்ற இதர செயல்முறைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக கோழிகளை பிடித்து நம் கைகளில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அப்போது கோழிகளின் இறகுகளைப் பிடித்திருப்பதால் அவற்றின் இயக்கம் தடை செய்யப்படுகிறது.
கூண்டுகளிலிருந்து கோழிகளை எடுக்கும் போது, அவற்றின் தலையை கழுத்துடன் சேர்த்து முதலில் வெளியே வருமாறு அவற்றின் உடலை இறக்கைகளுடன் சேர்த்து நம்முடைய இரண்டு கைகளால், கோழிகளுக்கு காயம் ஏற்படாமல் எடுக்கவேண்டும். இதே செயல்முறையினை கோழிகளை கூண்டுக்குள் போடும் போது பின்பற்றவேண்டும். அதாவது தலை முதலில் கூண்டுக்குள் போகுமாறு வைத்து பிறகு அவற்றின் உடல் உள்ளே போகுமாறு போட வேண்டும்.
கோழிகளை பரிசோதிப்பதற்காகப் பிடிக்கும்போது அவற்றின் அடி வயிற்றுப்பகுதி நம்முடைய உள்ளங்கையில் இருக்குமாறு வைத்து அவற்றின் இரண்டு கால்களையும் நம்முடைய விரல்களால் நன்றாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு வைக்கும்போது கோழிகளின் தலை பரிசோதிப்பவரை நோக்கி இருக்குமாறு நம்முடைய கையில் வைக்க வேண்டும். ஒரு கையால் கோழியைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் நாம் அவற்றைப் பரிசோதிக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கோழிகளைப் பரிசோதிக்கும் போது கோழிகளுக்கு அயற்சி எதுவும் ஏற்படாமல் மென்மையாகக் கையாளுவதால் அவை உதறுவதைத் தடுக்கலாம்.

மேலே செல்க

கோழிகளில் முட்டை உருவாதல்


கோழிகளில் மஞ்சள் கரு உருவாதல்
கோழி முட்டையின் மஞ்சள் கருவானது உண்மையில் கோழிகளின் இனப்பெருக்க அணு அல்ல. ஆனால் கருவிற்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய ஒரு பகுதியாகும். பெட்டைக் கோழிகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைந்தவுடன் அவற்றின் கரு முட்டைப் பையும், கருக் குழாயும் பல்வேறு விதமான வளர்ச்சியினை அடையும். முதல் முட்டை இடுவதற்கு 11 நாளுக்கு முன்னால் கோழிகளின் உடலில் பல்வேறு விதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். கோழிகளின் பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதியிலிருந்து எப் எஸ் எச் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோனின் விளைவாக கருமுட்டைப் பையில் கருமுட்டைகளில் வளர்ச்சி ஏற்பட்டு அவை அளவில் அதிகரிக்கும். மேலும் செயல்படத் தொடங்கிய கருமுட்டைப் பையும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், டெஸ்டோஸ்டீரோன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இரத்தத்திலுள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கோழிகளின் எலும்பு மஜ்ஜையில் புரத உற்பத்தி, கல்லீரலில் கொழுப்புகள் உற்பத்தி, கருமுட்டைக் குழாயின் அளவு அதிகரித்து அதில் அல்புமின் புரதங்களின் உற்பத்தி, கோழி முட்டையின் ஓட்டின் உட்பகுதி சவ்வுகள் போன்றவற்றை உற்பத்தி செய்யத்தூண்டும். கருவினைச் சுற்றி மஞ்சள் கரு படிய ஆரம்பிக்கும். ஒரு மஞ்சள் கரு முதிர்ச்சியடைய 10 நாட்களாகும்.
கருவினைச் சுற்றி மஞ்சள் கரு படிவது மிக மெதுவாக இருக்கும். மேலும் அதன் நிறம் வெளிறியதாகவும் காணப்படும். முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள நிறமி ஸான்தோஃபில் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்திலிருந்து பெறப்படுகிறது. முதலில் இந்த நிறமி தீவனத்திலிருந்து இரத்தத்திற்குச் சென்று பிறகு மஞ்சள் கருவிற்கு செல்லுகிறது. அதிக அளவிலான கரோட்டினாய்டு நிறமிகள் மஞ்சள் கருவின் மத்தியிலிருந்து அதன் வெளிப்பகுதியிலிருந்து படிய ஆரம்பிக்கிறது. பிறகு முழு மஞ்சள் கருவும் உருவாகி முட்டையானது கருமுட்டைப் பையின் கடைசிப் பகுதியில் சென்று சேர்கிறது. சலேசா புரதம் அவற்றின் எதிர்ப்புறத்தில் முறுக்கி முட்டை இட்டவுடன் மஞ்சள் கருவினை முட்டையின் மத்தியில் வைக்கிறது.

கோழி முட்டையின் உட்சவ்வு உருவாதல்
கரு முட்டைக் குழாயின் இஸ்துமஸ் பகுதியில் முட்டையின் உட்சவ்வுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த சவ்வுகள் நிறைய பின்னப்பட்ட நார்களால் ஆனவை. இவை தண்ணீர் மற்றும் காற்று உட்புக அனுமதிக்கும். மொத்தத்தில் முட்டையின் உட்பகுதியில் இரண்டு சவ்வுகள் உருவாகும். ஒன்று உட்சவ்வு மற்றொன்று வெளிச்சவ்வு. முதலில் இந்த இரண்டு சவ்வுகளும் நன்றாக இணையாமல் இருக்கும். பிறகு முட்டையில் தண்ணீர் மற்றும் உப்புகளும் சேர்க்கப்பட்டு முட்டையின் முழு உருவம் உருவாகிறது. பிறகு முட்டை கர்ப்பப்பையினை சேர்ந்தடைகிறது. வெளிப்புற சவ்வு உட் புற சவ்வினை விட மூன்று மடங்கு தடிமன் அதிகமானது. வெளிப்புற சவ்வு 0.05மிமீ தடிமனும், உட்புற சவ்வு 0.015 மிமி தடிமனும் ஆனது. இந்த இரு சவ்வுகளும் ஒன்றாக ஒட்டிக்கொண்டு இருக்கும். ஆனால் முட்டையில் காற்றுப் பை பகுதியில் மட்டும் இவை இரண்டும் பிரிக்கப்பட்டிருக்கும். கோழிகள் முட்டையினை இடும் போது அதிலுள்ள காற்றுப்பைகள் சிறிதாக இருக்கும், பிறகு நாளாக நாளாக காற்றுப்பையின் அளவு அதிகரிக்கும்.

முட்டை ஓடு உருவாதல்
கோழியின் கர்ப்பப்பை அல்லது முட்டை ஓடு சுரக்கும் பகுதியில் முட்டை நீண்ட நேரம் இருக்கும். அங்கு முட்டை ஓடு உருவாகும். முட்டை ஓடு உருவாவதற்கு 19 முதல் 20 மணி நேரம் ஆகும். முட்டை ஓடானது கால்சியம் கார்பனேட், புரதம், மியூக்க பாலி சாக்கரைட் கலந்த கலவையால் ஆனது. முட்டை ஓட்டின் உட்சவ்வு முட்டை ஓட்டின் உட்பகுதியுடன் ஒட்டியிருக்கும். முட்டை ஓடானது, முட்டையின் உட்சவ்வுடன் பேசல் கேப் எனும் பகுதியால் இணைக்கப்பட்டிருக்கும். பேசல் கேப் பகுதி முட்டை ஓட்டின் உட்புறப் பகுதியாகும். முட்டை ஓட்டின் பெரும்பாலான பகுதி பேலிசேட் அல்லது காலம் எனும் மிகச்சிறிய ஓட்டைகள் நிறைந்த அமைப்பால் ஆனது. முட்டை ஓட்டின் கடைசிப் பகுதி கியூட்டிகிள் எனப்படும். இது முட்டையினை சுற்றி இருக்கும் ஒரு கரிமப்பொருளாகும். கியூட்டிக்கிள் பகுதி முட்டை ஓட்டில் இருக்கும் மிகச்சிறிய துளைகளை அடைத்து விடுவதால் முட்டையிலிருந்து அதிகப்படியான ஈரப்பதம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மேலும் பாக்டீரியாக்கள் முட்டையினுள் உட்செல்வதும் தடுக்கப்படுகிறது.

முட்டை இடுதல்

கரு முட்டைக் குழாயின் சிறிய பகுதியில் முட்டை உருவாகி பிறகு அக் குழாயின் கடைசிப் பகுதிக்கு நகர்கிறது. கோழிகள் பயப்படாமல் இருந்தால் முட்டை கோழிகளின் முட்டை இடும் பகுதிக்கு இணையாக சுழன்று சென்று கரு முட்டைக் குழாயின் பெரிய வெளிப்பகுதி வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் முட்டை இவ்வாறு சுழன்று செல்வது பாதிக்கப்பட்டால் முட்டை கோழிகளின் முட்டை இடும் பகுதி வழியாக உடனடியாக வெளியேற்றப்படுகிறன்றன.
வ.
எண்.
கரு முட்டைக் குழாயின் பகுதி
வேலைகள்
முட்டை உருவாகும் காலம்
நீளம் (செமீ)
1 இன்ஃபன்டிபுளம் முட்டை மஞ்சள் கருவைப் பெற்று உள்ளே செலுத்துதல் 15 நிமிடங்கள் 9
2 மேக்னம் அடர்த்தியான மற்றும் அடர்த்தி குறைந்த ஆல்புமின் புரதம் 3 மணி நேரம் 33
3 இஸ்த்மஸ் முட்டை ஒட்டு சவ்வு உருவாதல் 1 மணி நேரம்& 15 நிமிடங்கள் 10
4 யூட்ரஸ் முட்டை ஓடு உருவாதல் 18 முதல் 21 மணி நேரம் (சராசரியாக 20 மணி நேரம்) 10
5 வஜைனா முட்டையிடும் இடம் 2 முதல் 5 நிமிடங்கள் 6
மொத்தம் 24 மணி நேரம் & 35 நிமிடங்கள் 68

முட்டையின் வடிவம்
முட்டையில் மொத்தம் நான்கு பாகங்கள் உள்ளன. அவையாவன, 1. மஞ்சள் கரு 2. ஆல்புமின் (3)முட்டை ஓட்டு சவ்வு (4) முட்டை ஓடு

1)முட்டை மஞ்சள்:
முட்டையின் மஞ்சள் கருவானது சலேசா மூலம் முட்டையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சலேசா, அடர்த்தியான அல்புமின் புரதத்துடன் ஒரு முனையில் இணைக்கப்பட்டு மறு முனையில் முட்டை மஞ்சள் கருவுடன் இணைக்கப்பட்டுள்ளது. முட்டை மஞ்சள் கருவைச் சுற்றி ஒரு நிறமற்ற வைட்டலின் சவ்வு உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் லேட்டிபெரா எனும் அமைப்பு உள்ளது. இது முட்டையின் மையப்பகுதியில் உள்ள ஒரு உருண்டை வடிவ வெளிறிய நிறமுடைய திரவமாகும். முட்டையினை வேக வைக்கும்போது இந்த திரவம் கடினமாவதில்லை. முட்டையின் எடையில் 30-33% மஞ்சள் கரு உள்ளது. முட்டையின் மஞ்சள் கரு உருவாகும்போது மஞ்சள் கரு வட்ட வடிவ வளையங்களாக கருவினைச் சுற்றி படிகிறது.
முட்டையின் மஞ்சள் கருவின் மையத்திலுள்ள பகுதி முட்டையின் இனப்பெருக்கப்பகுதியாகும். கருமுட்டை விந்துவால் கருவுற்றிருந்தால் அதற்கு பிளாஸ்டோடெர்ம் என்று பெயர், கருவுறாவிட்டால் அதற்கு பிளாஸ்டோ டிஸ்க் என்று பெயர்.

2) அல்புமின் :
அல்புமின் அல்லது முட்டை வெள்ளைக்கரு மஞ்சள் கருவினைச் சுற்றியிருக்கிறது. அல்புமினில் நான்கு அடுக்குகள் உள்ளன.
  1. உட்பகுதி அல்லது சலாசிபெரஸ் அடுக்கு
  2. ரேன்ஸ்
முட்டையின் மஞ்சள் கருவின் மத்தியிலுள்ள கருவுற்ற கருமுட்டை அல்லது பிளாஸ்டோடெர்மை ஆல்புமின் பாதுகாக்கிறது. பிளாஸ்டோடெர்ம் முட்டை ஓட்டிற்கு அருகில் போய் அடிபடுவதை அல்புமின் தடுக்கிறது. மேலும் பாக்டீரியாக்கள் மஞ்சள் கருவிலோ அல்லது ஜெர்ம் செல்லையோ அணுகுவதையும் அல்புமின் தடுக்கிறது.

3) முட்டை ஓட்டுச் சவ்வு:
முட்டை ஓட்டின் உட்பகுதியில் இரண்டு சவ்வுகள் உள்ளன. ஒன்று உட் சவ்வு மற்றொன்று வெளிச்சவ்வாகும். வெளிச்சவ்வு முட்டை ஓட்டுடனும், உட்சவ்வு அல்புமினுடனும் இணைந்து முட்டையின் உட்பகுதியினைச் சுற்றி உள்ளது. முட்டையின் அங்கங்களிலிருந்து வாயுக்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் முட்டை ஓட்டுச் சவ்வு துணை புரிகிறது. 

4) முட்டை ஓடு :
முட்டை ஓட்டில் பின்வரும் பகுதிகள் உள்ளன:
  1. மேமில்லரி அடுக்கு
  2. ஸ்பான்ஜி அல்லது கால்கேரியஸ் லேயர்
  3. க்யூட்டிக்கிள் அல்லது புளூம்
  4. போர் சிஸ்டம்
கோழிகளின் இனங்களைப் பொறுத்து முட்டை ஒட்டின் நிறம் பழுப்பாகவோ அல்லது, வெள்ளையாகவோ அல்லது பச்சையாகவோ இருக்கும். பழுப்பு நிறம் ஊபோர்பைரின் எனும் நிறமியாலும், பச்சை நிறம் பிலிவர்டின் எனும் நிறமியாலும், ஏற்படுகிறது. பச்சை நிற முட்டைகள் ஆரகானா இன கோழிகள் இடுகின்றன.
முட்டையின் பல்வேறு இயற்பொருட்கள்
கோழியினம்
கோழிகள் ஜப்பானியக் காடைகள் வான்கோழிகள் வாத்து
முட்டையின் எடை (g) 57 12 85 80
மஞ்சள் கரு (%) 30 32 32 35
ஆல்புமின் (%) 60 48 56 53
முட்டை ஓடு (%) 10 20 12 12

முட்டையின் வேதியியல் உட்பொருட்கள்

உள்ளடக்கம் முழு முட்டை முட்டை வெள்ளைக்கரு முட்டை மஞ்சள் கரு முட்டை ஓடு மற்றும் முட்டை ஓட்டுச் சவ்வு
100% 56-61% 27-32% 8-11%
தண்ணீர் 65.0 87.0 48.0 2.0
புரதம் 12.0 11.0 17.5 4.5
கொழுப்பு 11.0 0.2 32.5 -
மாவுச்சத்து 1.0 1.0 1.0 -
சாம்பல் 11.0 0.8 1.0 93.5
மொத்தம் 100.0 100.0 100.0 100.0

முட்டைப் புரதங்கள்

அல்புமின் புரதங்கள்

புரதம் % செயல்பாடுகள் அல்லது குணநலன்கள்
1. ஓவால்புமின் 54.00 புரோட்டியேஸ் இன்ஹிபிட்டார்
2. ஓவோ டிரான்ஸ்பெரின் 12.00 உலோகங்களடன் இணைதல் (இரும்பு)
3. ஓவோமியூக்காய்ட் 11.00 டிரிப்சின் வேலையினைத் தடுத்தல்
4. ஓவோ குளோபுலின்ஸ் 8.00 நுரை ஏற்படுத்தும் பொருள்
5. ஓவோமியூசின் 3.50 கொழகொழப்புத் தன்மையினை ஏற்படுத்தும் பொருள்
6. லைசோசைம் 3.40 பாக்டீரியாக்களைக் கொல்கிறது
7. ஓவோ இன்ஹிபிட்டர் 1.50 சீரின் புரோட்டியேஸ் இன்ஹிபிட்டார்
8. ஓவோபிளேவோபுரோட்டின் 0.80 ரிபோபிளேவின் உடன் இணைகிறது
9. ஓவோமேக்ரோகுளோபுலின் 0.50 சிறந்த ஆன்டிஜெனிக் பொருளாக செயல்படுகிறது
10. அவிடின் 0.05 பயோடின் உடன் இணைகிறது
11. சிஸ்டாடின் 0.05 புரோட்டியேஸ் இன்ஹிபிட்டார்
 

மஞ்சள் கருவிலுள்ள புரதங்கள்

புரதம் % செயல்பாடுகள் அல்லது குணநலன்கள்
1. ஓவோவிட்டாலின் 75.00 Phosphorus containing protein
2. ஓவோலிவிட்டின் 25.00 Sulphur containing protein

முட்டையிலுள்ள கொழுப்புச்சத்து


கொழுப்பு %
1. டிரைகிளிசரைட்ஸ் 72.00
2. பாஸ்போலிப்பிட்ஸ் 23.00
3. கொலஸ்டிரால் மற்றும் இதர ஸ்டீரால்கள் 5.00

முட்டையிலுள்ள மாவுச்சத்துகள்
முட்டையிலுள்ள மாவுச்சத்து மிகவும் குறைவாகும். அதாவது முட்டையின் எடையில் மாவுச்சத்து வெறும் 1 சதவிகிதமாகும். இதில் 75% அல்புமினிலும், 25% மஞ்சள் கருவிலும் உள்ளது. ஆல்புமினில் உள்ள பாதி மாவுச்சத்து குளுக்கோஸாகவும், மீதம் கிளைக்கோபுரதமாகவும் உள்ளது. உலர்ந்த முட்டைப் பொருளை சேமித்து வைக்கும்போது குளுக்கோஸ் முட்டையிலுள்ள மற்ற பொருட்களுடன் வினை புரிந்து தேவையற்ற நிறங்களையும், விரும்பத்தகாத வாசனையையும் ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க முட்டையினை உலர்த்துவதற்கு முன்பு என்சைம்கள் மூலமாக குளுக்கோஸை நீக்கி விட வேண்டும்.

கோழி முட்டையிலுள்ள வைட்டமின் சத்துகள்

ஓடற்ற கோழி முட்டை (ஓடுடன் கூடிய கோழி முட்டை - 60.9 கிராம்)
வைட்டமின்கள்
அளவுகள்
முழுக் கொழுப்பு
முட்டை வெள்ளைக்கரு
மஞ்சள் கரு
1. A
IU
260.00
0
260.00
2. D
IU
27.00
0
27.00
3. E
mg
0.88
0
0.88
4. B12
mg
0.48
0
0.48
5. பயோடின்
mg
11.00
2.62
8.38
6. கோலீன்
mg
237.00
0.50
236.50
7. ஃபோலிக் அமிலம்
mg
0.03
0.01
0.03
8. இனோசிட்டால்
mg
5.90
1.54
4.36
9. நியாசின்
mg
0.05
0.04
0.01
10. பேன்டோதெனிக் அமிலம்
mg
0.81
0.09
0.72
11. பைரிடாக்சின்
mg
0.07
0.01
0.06
12. ரைபோபிளேவின்
mg
0.18
0.11
0.07
13. தயமின்
mg
0.05
0.01
0.05
* • முட்டையில் வைட்டமின் சி இல்லை
 
கோழி முட்டையிலுள்ள தாது உப்புகள்
ஓடற்ற கோழி முட்டை (ஓடுடன் கூடிய கோழி முட்டையின் எடை 60.9 கிராம்)
தாது உப்புகள் (மில்லி கிராமில்) முழுக்கொழுப்பு முட்டை வெள்ளைக்கரு முட்டையின் மஞ்சள் கரு
1. கால்சியம் 29.00 3.80 25.20
2. குளோரின் 96.00 66.10 29.90
3. தாமிரம் 0.03 0.01 0.02
4. ஐயோடின் 0.03 0.01 0.03
5. இரும்புச்சத்து 1.08 0.01 1.05
6. மெக்னீசியம் 6.30 4.15 2.15
7. மாங்கனீஸ் 0.021 0.01 0.02
8. பாஸ்பரஸ் 110.00 8.00 102.00
9. பொட்டாசியம் 74.00 57.00 17.00
10. சோடியம் 72.00 63.00 9.00
11. சல்ஃபர் 90.00 62.00 28.00
12. துத்தநாகம் 0.71 0.05 0.66


முட்டையிலுள்ள நிறமிகள்
முட்டையிலுள்ள நிறமிகள் முட்டையின் எல்லாப்பகுதிகளிலும் விரவியுள்ளன. முட்டை மஞ்சள் கருவில் அதிகத்தரம் வாய்ந்த நிறமிகள் உள்ளன. முட்டை மஞ்சள் கருவிலுள்ள நிறமிகள் அவை கொழுப்பில் கரைகின்ற திறனைப் பொறுத்தும், தண்ணீரில் கரைகின்ற திறனைப் பொருத்தும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. லிப்போகுரோம்கள் கரோட்டினாய்டு குழுவினைச் சேர்ந்தவை (கரோட்டின் மற்றும் ஜான்தோபில்ஸ்). முட்டையிலுள்ள அல்புமினில் ஓவோபிளேவின் எனும் நிறமி உள்ளது. ஊபோர்பைரின் அல்லது ஊசையான் போன்ற நிறமிகள் முட்டை ஓட்டின் நிறத்திற்கு காரணமாக இருக்கின்றன.

கோழி இறைச்சியிலுள்ள வேதியியல் பொருட்கள் (100g உண்ணக்கூடிய இறைச்சியில் உள்ள பொருட்கள்))

சத்துகள்

கோழி வான்கோழி கூஸ் வாத்து வாத்து ஜப்பானியக் காடை
தண்ணீர் (%) 66 70 50 49 73
புரதம்(%) 18 20 16 11 20
கொழுப்பு (%) 15 8 34 34 5
மாவுச்சத்து(%) Traces Traces Traces Traces Traces
சாம்பல் (தாது உப்புகள்) (%) 0.79 0.88 0.87 0.68 1.40
எரிசக்தி (கிலோ கலோரிகளில் / 100g) 215 160 371 404 190
கொலஸ்டீரால் (mg / 100g) 75 68 76 80 62

கோழி இறைச்சியிலுள்ள வைட்டமின்கள் (உண்ணக்கூடிய இறைச்சியில் உள்ளது)

வைட்டமின் அலகுகள் மில்லி கிராம்/100 கிராம் உண்ணக்கூடிய இறைச்சி
IU 41
சி mg 1.6
தயமின் mg 0.06
ரைபோபிளேவின் mg 0.12
நியாசின் mg 6.8
பேன்டோதனிக் அமிலம் mg 0.91
பைரிடாக்சின் (வைட்டமின் B6) mg 0.35
ஃபோலிக் அமிலம் mg 0.31

கோழிப்பண்ணையினை கட்டுதல்

  • பல்வேறு விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க
  • எளிதாகவும், பொருளாதார ரீதியாக குறைந்த செலவிலும் கோழிப்பண்ணையை நடத்த
  • அறிவியல் பூர்வமாகவும், கட்டுப்பாடான முறையிலும் கோழிகளுக்குத் தீவனமளிக்க
  • கோழிகளைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தில் முறையாகப் பேணுதல்
  • நோயினைக் கட்டுப்படுத்த
  • கோழிப்பண்ணையினை முறையாக மேலாண்மை செய்ய
கோழிப்பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்தல்
  • வசிப்பிடங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் கோழிப்பண்ணைகள் தொலைவில் இருக்கவேண்டும்.
  • கோழிப்பண்ணைக்கு நன்றாக சாலை வசதிகள் இருக்கவேண்டும்.
  • அடிப்படைத் தேவைகளான தண்ணீர், மின்சார வசதி போன்றவை இருக்கவேண்டும்.
  • குறைந்த கூலிக்கு பண்ணையாட்கள் கிடைக்கும் இடத்தில் பண்ணை அமைக்கவேண்டும்.
  • கோழிப்பண்ணை நல்ல மேடான இடத்தில் இருக்கவேண்டும். தண்ணீர் தேங்கும் இடத்தில் இருக்கக்கூடாது.
  • கோழிப்பண்ணை அமைக்கும் இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும்.

கோழிப்பண்ணையின் வடிவமைப்பு
                                         
ஒரே கொட்டகை மட்டுமே இருப்பதால் ஒரு சிறிய கோழிப்பண்ணைக்கென தனியான வடிவமைப்புகள் தேவைப்படாது. நடுத்தர மற்றும் பெரிய பண்ணைகளுக்கு பண்ணை வீடுகளை அமைப்பதில் சரியான வடிவமைப்பு தேவை. இதில் கடைபிடிக்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்களாவன.
  • பார்வையாளர்களையும், வெளியிலிருந்து வரும் வாகனங்களையும் கோழிகளுக்கு அருகில் அனுமதிக்காதவாறு பண்ணைகள் வடிவமைக்கப்படவேண்டும்.
  • தூய காற்று குஞ்சுக்கொட்டகையில் முதலில் நுழைந்து, பிறகு வளரும் கோழிக்கொட்டகையில் சென்று கடைசியாக முட்டைக்கோழி கொட்டகைக்குள் செல்லுமாறு கோழிப்பண்ணைக் கொட்டகைகள் வடிவமைக்கப்படவேண்டும். இதனால் முட்டைக்கோழிகளிடமிருந்து குஞ்சுக்கோழிகளுக்கு நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
  • குஞ்சுக்கோழிக் கொட்டகைக்கும், வளரும் கோழிக்கொட்டகைக்கும் இடையில் குறைந்தது 50-100 அடி இடைவெளியும், வளரும் கோழிக் கொட்டகைக்கும் முட்டைக் கோழிக் கொட்டகைக்கும் இடையில் 100 மீட்டர் இடைவெளியும் இருக்கவேண்டும்.
  • முட்டை சேமிக்கும் அறை, அலுவலகம், தீவனம் சேமிக்கும் அறை போன்றவை பண்ணையில் நுழைவு வாயிலிலேயே அமைக்கப்படுவதால், கோழிப்பண்ணைகளைச் சுற்றி ஆட்கள் நடமாடுவதைத் தவிர்க்கலாம்.
  • இறந்த கோழிகளைப் புதைக்கும்குழி, மற்றும் நோய் பாதிக்கப்பட்ட கோழிகளைப் பராமரிக்கும் அறை போன்றவை பண்ணையின் ஒரு மூலையில் அமைக்கப்படவேண்டும்.
மேலே செல்க

கோழிப்பண்ணையிலுள்ள பல்வேறு விதமான கோழிக்கொட்டகைகள்

  • குஞ்சுக் கொட்டகை-இக்கொட்டகை முட்டைக் கோழிக்குஞ்சுகளின் 0 முதல் 8 வார வயது வரை பராமரிக்க உபயோகிக்கப்படுகிறது.
  • வளரும் கோழிக் கொட்டகை-இக்கொட்டகை முட்டைக் கோழிகளின் 9-18 வார வயதில் பராமரிக்கப் பயன்படுகிறது.
  • குஞ்சுக் கோழி மற்றும் வளரும் கோழிக்கொட்டகை இக்கொட்டகையில் கோழிகளை 0-18 வார வயதில் வளர்க்கப் பயன்படுகிறன்றது.
  • முட்டைக்கோழிக் கொட்டகை-18 வார வயதிலிருந்து 72 வார வயது வரை முட்டைக் கோழிகளை வளர்க்க இக்கொட்டகை பயன்படுகிறது.
  • கறிக்கோழிக் கொட்டகை-இக்கொட்டகையில் கறிக்கோழிகளை 6 வார வயது வரை வளர்க்கப் பயன்படுகிறது.
  • இனப்பெருக்கக் கோழிக் கொட்டகை-இக்கொட்டகைகளில் பெட்டைக்கோழிகளும், சேவல்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்க்கப் பயன்படுகிறது.
  • சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கொட்டகை-இக்கொட்டகைகளில் கோழிகள் வளர்வதற்கேற்றவாறு கொட்டகையின் சுற்றுப்புற சூழ்நிலை கட்டுப்படுத்தப்படுகிறது.

கறிக்கோழிகளை வளர்ப்பதற்கேற்ற சுற்றுப்புற சூழ்நிலைகள்
வெப்பநிலை             - 22-300C (70-850F)
ஈரப்பதம்        - 30-60 %
அமோனியா அளவு - 25 ppmஐ விடக் குறைவு
ஆழ்கூளத்தின் ஈரப்பதம் - 15-25%
உட்செல்லும் காற்றின் அளவு - 10-30 மீட்டர்/நிமிடம்

கோழிப்பண்ணைகளை அமைக்கும் திசை
கோழிப்பண்ணைகளின் நீளவாக்குப் பகுதி கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைப்பதால் கோழிகளின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதைத் தடுக்கலாம்.

அளவு
ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது ஒவ்வொரு கறிக்கோழிக்கும் ஒரு சதுர அடி இட வசதியும், ஒரு முட்டைக் கோழிக்கும் 2 சதுர அடி இட அளவு தேவைப்படும். எனவே ஒரு கொட்டகையில் வளர்க்கப்படும் கோழிகளின் எண்ணிக்கைக்கேற்றவாறு கொட்டகையின் அளவு வேறுபடும்.

நீளம்
கோழிப்பண்ணைக் கொட்டகையின் நீளம் எவ்வளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கோழிக்கொட்டகையின் நீளம் வேறுபடும்.

அகலம்
வெப்ப மண்டலப் பகுதிகளில் இரண்டு பக்கமும் திறந்தவாறு அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளின் அகலம் 22-25 அடிக்கு மேல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கூறிய அகலத்துடன் கொட்டகைகளை அமைத்தால் தான் கோழிக் கொட்டகைகளின் மத்தியப் பகுதியில் போதுமான அளவு காற்றோட்டம் இருக்கும். மேற்கூறிய அளவை விட அதிக அகலமுடைய கொட்டகைகள் அமைத்தால் அவற்றில் வெப்பம் அதிகமுள்ள நேரத்தில் காற்றோட்டம் இருக்காது. கோழிக் கொட்டகைகளின் அகலம் 25 அடிக்கு மேல் இருந்தால் கூரையின் நடுப்பகுதியில் காற்றோட்டம் இருக்குமாறு அமைக்கவேண்டும். வெப்பமான, உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய வாயுக்கள் கூரையிலுள்ள ஜன்னல்கள் வழியாக வெளியேறிவிடும். சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கோழிப்பண்ணைகளின் அகலம் 40 அடி அதற்கு மேலும் அமைக்கப்படுகிறது. ஏனெனில் இக்கொட்டகைகளில் காற்றோட்டம் எக்ஸாஸ்டர் காற்றாடிகள் மூலம் அளிக்கப்படுகிறது.

உயரம்
கொட்டகையின் பக்கவாட்டுப் பகுதி, கொட்டகையின் அஸ்திவாரத்திலிருந்து கூரை வரை 6-7 அடியும், மத்தியப் பகுதியில் 10-12 அடியும் இருக்கவேண்டும். கூண்டு முறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளில், கூண்டுகளின் அமைப்புக்கேற்றவாறு கொட்டகையின் உயரம் அமைக்கப்படவேண்டும்.

அஸ்திவாரம்
        கோழிப்பண்ணைகளின் உள்ளே தண்ணீர் புகாதவாறு பாதுகாப்பதற்கு நல்ல தரமான அஸ்திவாரம் மிகவும் அவசியமாகும். கொட்டகையின் அஸ்திவாரத்தை காங்கிரீட் உதவியால் 1-1.5 அடி உயரத்திற்கு நிலத்திற்கு அடியிலும், நில மட்டத்திற்கு மேல் 1-1.5 அடி உயரமும் இருக்குமாறு அமைக்கவேண்டும்.

கொட்டகையின் தரை
        கொட்டகையின் தரை காங்கிரீட்டால் அமைக்கப்பட்டு, எலிகள் புகாதவாறும், ஈரமற்றதாகவும் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். கொட்டகையின் தரை அதன் சுவற்றிலிருந்து 1.5 அடி நீண்டிருக்குமாறும் அமைப்பதால் எலி மற்றும் பாம்புத் தொல்லையிலிருந்து கோழிகளைக் காப்பாற்றலாம்.
கதவுகள்
ஆழ்கூள முறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளில் கதவுகள் வெளியே திறக்குமாறு அமைக்கப்பட வேண்டும். கதவின் அளவு 6 x .5அடி அளவில் அமைக்கப்படவேண்டும். கோழிப்பண்ணைக் கொட்டகையின் கதவுக்கு வெளியில் ஒரு சிறிய பள்ளம் அமைத்து கிருமி நாசினிக் கரைசல் ஊற்றி வைக்கவேண்டும்.

கொட்டகையின் பக்கவாட்டுச் சுவர்கள்
கொட்டகையின் பக்கவாட்டுச்சுவர் 1-1.5 அடி உயரமும், அதாவது கோழிகளின் முதுகுப்பகுதிக்கு இணையாக இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். இந்த பக்கவாட்டுச் சுவர் கோழிகளை வெயில், குளிர், மழையின்போதும் பாதுகாக்கிறது. இது மட்டுமன்றி பக்கவாட்டுச் சுவர் கோழிக்கொட்டகையில் போதுமான அளவு காற்றோட்டம் இருக்கவும் வழிவகை செய்கிறது. ஆனால் கூண்டு முறை அமைக்கப்படும் கொட்டகைகளில் பக்கவாட்டுச்சுவர் தேவையில்லை.

 கூரை
கோழிப்பண்ணைக் கொட்டகையின் கூரை ஓடு, தாவர நார்கள், ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள், காங்கிரீட் போன்றவற்றால் செலவிற்கேற்றவாறு அமைக்கலாம். பல்வேறு விதமான கூரைகளான கேபிள், பாதி மானிட்டர், முழு மானிட்டர், தட்டையான காங்கிரீட், கேம்ப்ரல், கோத்திக் போன்றவற்றை அமைக்கலாம். கேபிள் வடிவக் கூரை வெப்பமண்டலப் பகுதிகளான இந்தியா போன்ற நாட்களுக்கு ஏற்றது.

கூரையின் நீட்டியுள்ள பகுதி
பண்ணைக் கொட்டகையின் சுவரை ஒட்டி நீட்டியிருக்கும் கூரைப் பகுதி 3.5 அடிக்கு குறையாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும். இவ்வாறு அமைப்பதால் மழை நீர் கொட்டகைக்குள் செல்வதையும் தடுக்கலாம்.

வெளிச்சம்
கோழிப்பண்ணைகளில் தரையிலிருந்து 7-8 அடி உயரத்தில் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இன்கேன்டசன்ட் விளக்குகளை உபயோகிக்கும்போது இரண்டு விளக்குகளுக்கும் இடையிலுள்ள இடைவெளி 10 அடியாக இருக்கவேண்டும். ஃபுளூரெசன்ட் விளக்குகளை அமைக்கும்போது அவற்றுக்கு இடையிலுள்ள இடைவெளி 15 அடியாக இருக்கவேண்டும்.
மேலே செல்க

கோழிப்பண்ணைக் கொட்டகைகளை அமைக்கும் முறைகள்

கோழிகள் பல்வேறு முறைகளில் கொட்டகைகளை அமைத்து வளர்க்கலாம். ஆனால் பல்வேறு முறைகளில் கொட்டகைகள் அமைப்பதற்கு கீழ்க்கண்ட காரணிகளை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.
  1. கிடைக்கும் நிலத்தின் அளவு
  2. நிலத்தின் விலை
  3. பண்ணை செயல்பாடுகளின் வகை
  4. தட்பவெப்பநிலை
  5. வேலையாட்கள் கிடைக்கும் நிலை
பொதுவாக கோழிகளுக்கு கொட்டகைகளை அமைப்பதற்கு கீழ்க்கண்ட மூன்று முறைகள் பின்பற்றப்படுகின்றன:
    1. திறந்த வெளி வீடமைப்பு
    2. பகுதியளவு தீவிர முறை வீடமைப்பு
    3. தீவிர முறை வளர்ப்பு
      1. ஆழ்கூள முறை
      2. சாய்வான தரை அமைப்பு
      3. சாய்வான தரையுடன் கூடிய ஆழ்கூள வீடமைப்பு
      4. கூண்டு முறை வளர்ப்பு
1) திறந்த வெளி வீடமைப்பு
இந்த வகை வீடமைப்பினைப் போதுமான அளவு இடவசதி இருந்தால் மட்டுமே அமைக்கமுடியும். மேலும் போதுமான எண்ணிக்கையிலான கோழிகளை அதிக அடர்த்தியின்றியும் வளர்ப்பதற்கு அதிக இடம் தேவைப்படும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 250 கோழிகளை வளர்க்கலாம். மேலும் இந்நிலத்தில் நிழல், பசுந்தீவனம், அடர் தீவனம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இந்நிலத்திலுள்ள பசுந்தீவனம் கோழிகளுக்கு ஏற்ற தீவன ஆதாரமாக அமைகிறது. கோழிகளை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க ஒரு கொட்டகையினை தற்காலிகமான கூரைகளைக் கொண்டும், சாதாரண மரக்கம்புகளைக் கொண்டும் அமைக்கவேண்டும். நிலத்திலுள்ள வயல்களில் பயிர்களை அறுவடை செய்த பின்பு பயிறுக்கேற்றவாறு சுழற்சி முறையில் கோழிகளை வளர்க்க உபயோகப்படுத்தலாம். எல்லா விதமான கோழியினங்களையும் இந்த முறையில் வளர்க்கமுடியும். இம்முறை ஆர்கானிக் முட்டை உற்பத்திக்கு பொதுவாக உபயோகப்படுத்தப்படுகிறது.

இம்முறையில் கோழி வளர்ப்பதன் நன்மைகள்
  • குறைந்த முதலீடு
  • அமைக்கத் தேவைப்படும் செலவு குறைவு.
  • கோழிகள் புல்தரையிலிருந்தே போதுமான அளவு தீவனத்தை உட்கொண்டு விடுவதால் அவற்றுக்குத் தேவைப்படும் தீவனத்தின் அளவு குறைவு.
  • மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுகிறது.
தீமைகள்
  • அறிவியல் ரீதியான மேலாண்மை முறைகளைப் பின்பற்ற முடியாது.
  • கோழிகள் முட்டைகளை அடர்த்தியான புல்வெளிகளில் இட்டுவிடுவதலால் கோழிகளுக்காக தனியான கூடுகள் அமைக்காத வரையில் முட்டைகளை சேகரிப்பது கடினம்.
  • மற்ற விலங்குகள் கோழிகளைத் தாக்குவதால் ஏற்படும் இழப்பு அதிகம்.
  • முறையாக கவனிக்காவிடில் வனப்பறவைகள் மூலம் நோய்கள் பரவுவது எளிது.
2) பகுதியளவு தீவிர முறை வளர்ப்பு
மேலே கூறியது போல கோழிகள் பாதி நேரம் கொட்டகைகளிலும், பாதி நேரம் மேய்ச்சல் தரைகளிலும் வளர்க்கப்படுகின்றன. அதாவது இரவு நேரங்களும், தேவைக்கேற்பவும், கொட்டகைகளில் அடைத்து விட்டு மீதி நேரம் முழுவதும் திறந்த வெளிகளில் கோழிகள் மேய அனுமதிக்கப்படுகின்றன. கொட்டகைகளின் தரை கடினமான தரையாகவும், மேய்ச்சல் நிலங்கள் திறந்த வெளிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையின் மூலம் வெற்றிகரமாக கோழி வளர்ப்பது திறந்த வெளிகளை நோய்க்கிருமிகளால் அசுத்தமடையாமல் பராமரிப்பதைப் பொறுத்தது. திறந்த வெளி நிலங்கள் சுழற்சி முறையில் உபயோகப்படுத்தலாம். ஒரு ஹெக்டேர் நிலத்தில் இம்முறையில் 750 கோழிகளை வளர்க்கலாம். இம்முறை பொதுவாக வாத்துகள் வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கோழிகளுக்குத் தீவனமும், தண்ணீரும் கொட்டகைகளில் அளிக்கப்படுகிறது.
நன்மைகள்
  • திறந்த வெளி வீடமைப்புடன் ஒப்பிடும்போது இம்முறையில் நிலங்களை நன்றாக உபயோகப்படுத்தலாம்.
  • பல்வேறு விதமான சுற்றுப்புற சூழ்நிலைகளிலிருந்து கோழிகளைப் பாதுகாக்கலாம்.
  • அறிவியல் முறையில் கோழிகளை வளர்ப்பது ஒரளவுக்கு இம்முறையில் சாத்தியம்.
தீமைகள்
  • வேலி போடுவதற்கு அதிக செலவாகும்
  • குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கொட்டகையினை சுத்தம் செய்து ஆழ்கூளத்தை அகற்ற வேண்டும்.
3) தீவிர முறை வளர்ப்பு
இம்முறையில் கோழிகள் கொட்டகைகளில் முழுவதும் அடைத்து வளர்க்கப்படுகின்றன. கொட்டகைகளில் தரையிலோ அல்லது கம்பி வலைகளின் மீதோ அல்லது கூண்டுகளிலோ கோழிகளை வளர்க்கலாம். இம்முறை ஒரு சிறந்த, வசதியான, செலவு குறைந்த, அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கும் நவீன முறையாகும்.
நன்மைகள்
  • பண்ணை அமைக்க குறைந்த இடமே தேவைப்படும்
  • சந்தைக்கு அருகிலேயே பண்ணைகளை அமைக்கலாம்.
  • தினந்தோறும் பண்ணையை மேலாண்மை செய்வது எளிது.
  • கோழிகளின் நடமாட்டம் தீவிர முறை வளர்ப்பில் குறைவாக இருப்பதால் கோழிகளின் உற்பத்தித் திறனும் அதிகரித்து, அதிக அளவு சக்தியும் சேமிக்கப்படுகிறது.
  • அறிவியல் முறையில் கோழிகளை வளர்க்கலாம். அதாவது இனப்பெருக்கம், தீவனமளித்தல், மருந்துகளை அளித்தல், கோழிகளைப் பண்ணையிலிருந்து நீக்குதல் போன்ற மேலாண்மை முறைகளை சுலபமாகவும், துல்லியமாகவும் செய்யலாம்.
  • நோயுற்ற கோழிகளை எளிதில் கண்டறிந்து தனியாகப் பிரித்து சிகிச்சை அளிக்கலாம்.
தீமைகள்
  • கோழிகளின் இயற்கையான குணநலன்களான இறக்கைகளை விரித்தல், தரையை கால்களால் பிரண்டுதல் போன்றவை பாதிக்கப்படுகிறது.
  • வெளிப்புற சூரிய ஒளி, தீவன ஆதாரங்கள் போன்றவை கோழிகளுக்குக் கிடைக்காததால் அவற்றுக்கு சரிவிகித தீவனத்தை அளிப்பதால் மட்டுமே அவற்றுக்கு சத்துப் பற்றாக்குறை நோய்களைத் தடுக்கலாம்.
  • நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்.
மேலே செல்க

ஆழ்கூள முறை வளர்ப்பு


இம்முறையில் கோழிகள் எப்போதும் கொட்டகையிலேயே வைத்து பராமரிக்கப்படுகின்றன. தீவனம், தண்ணீர் மற்றும் கூடுகள் போன்றவை கொட்டகையிலேயே அளிக்கப்படுகின்றன. கொட்டகையின் தரையில் கோழிகளுக்குத் தேவையான ஆழ்கூளத்தை 3 முதல் 5 இஞ்ச் உயரத்திற்கு இடவேண்டும். பொதுவாக நெல் உமி, மரத்தூள், கடலைப்பொட்டு, நறுக்கப்பட்ட வைக்கோல், போன்றவை ஆழ்கூளப்பொருட்களாகப் பயன்படுகிறது. இதனால் பண்ணையில் வேலையாட்கள் கோழிகளின் எச்சத்தை சுத்தம் செய்யும் நேரம் குறைவு. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆழ்கூளப்பொருட்களை இரண்டு இஞ்ச் உயரத்திற்கு போடவேண்டும்.


நன்மைகள்
  • வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி 12 போன்றவை ஆழ்கூளத்தில் பாக்டீரியாக்களின் செயல்பாடு காரணமாக இயற்கையாக கோழிகளுக்கு கிடைக்கிறது.
  • கோழிகளின் நலன் ஓரளவு பாதுகாக்கப்படுகிறது.
  • கோழிக்கொட்டகையில் பயன்படுத்தப்பட்ட ஆழ்கூளம் ஒரு சிறந்த உரமாகப் பயன்படுகிறது.
  • கூண்டு வளர்ப்பு முறையினை விட இம்முறையில் ஈக்களின் மூலம் ஏற்படும் தொல்லை குறைவு.
தீமைகள்
  • கோழிகளுக்கும் ஆழ்கூளத்திற்கும் நேரடியாகத் தொடர்பு இருப்பதால் கோழிகளுக்கு பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களின் தாக்குதல் அதிகம்.
  • ஆழ்கூளத்திலிருந்து தூசுகள் வருவதால் கோழிகளுக்கு சுவாச மண்டலம் சார்ந்த கோளாறுகள் ஏற்படும்.
  • ஆழ்கூளத்திற்காக செய்யப்படும் செலவு ஒரு அதிகப்படியான செலவினமாகும்.
  • காற்றோட்டம் குறைவாக இருந்தால் கோழிகளுக்கு கூண்டு முறையில் ஏற்படும் பாதிப்புகளை விட ஆழ்கூள முறையில் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகம்.
சேர்ந்த ஆழ்கூளம்
கோழிகளின் எச்சமும், ஆழ்கூளமும் சேர்ந்து மக்கி உரமாக மாறுகிறது. இதன் அளவு கோழிக்கொட்டகையில் 8-12 இஞ்ச் உயரத்தை அதன் உண்மையான அளவான 3-5 இஞ்சிலிருந்து அதிகரிக்கும். ஆழ்கூளத்தின் மீது பாக்டீரியாக்களின் செயல்பாடு காரணமாக அவை மக்கி, வெப்பம் உற்பத்தியாகி ஆழ்கூளத்தை வெதுவெதுப்பாகவும், உலர்வாகவும் வைக்கிறது. கோழிகளின் எச்சம் கொட்டகையில் இடப்பட்ட ஆழ்கூளத்தின் அளவை விட அதிகரிக்கும்போது புதிதாக ஆழ்கூளத்தை சேர்ப்பதால் அதிலுள்ள எச்சத்தின் அளவைக் குறைக்க முடியும். கோழிக்கொட்டகையிலுள்ள ஆழ்கூளத்தை அடிக்கடி கிளறி விடுவதால் பாக்டீரியாக்களின் செயல்பாடு அதிகரித்து, ஆழ்கூளம் நன்றாக மக்கும். ஒரு வருடம் கழித்து ஆழ்கூளத்தை மாற்றி, மக்கிய ஆழ்கூளத்தை நல்ல உரமாக உபயோகிக்கலாம். நன்றாக உருவான ஆழ்கூளம் மற்றும் கோழி எச்சம் கலந்த உலர்வாகவும்,உடையக்கூடியதாகவும், விரும்பத்தகாத வாசனைகள் அற்றதாவும் இருக்கும்.
    
மேலே செல்க

சாய்வான தரை


இந்த வகை தரை அமைப்பில் இரும்பு உருளைகள், அல்லது மர ரீப்பர்கள் தரையினை அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தரையிலிருந்து 2-3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அவற்றுக்கிடையிலுள்ள ஓட்டைகளின் வழியாக கோழிகளின் எச்சம் கீழே விழுந்துவிடும். மர ரீப்பர்களும், இரும்பு உருளைகளும் 2 இஞ்ச் அளவு விட்டம் உடையதாக ஒவ்வொரு உருளைகளுக்கும் இடையில் ஒரு இஞ்ச் இடைவெளியும் இருக்கவேண்டும். 
நன்மைகள்
  • கடினமான தரை அமைப்பினை விட இதற்கு குறைவான இட வசதியே தேவைப்படும்.
  • கோழிகளுக்கு ஆழ்கூளமாகப் பயன்படுத்தப்படும் படுக்கைப் பொருட்கள் குறைந்த அளவே தேவைப்படும்.
  • கோழிகளின் எச்சத்தை கையால் எடுத்துக் கையாள்வது தடுக்கப்படுகிறது.
  • சுகாதாரமானது
  • வேலையாட்களின் அளவைக் குறைக்கிறது.
  • மண் மூலம் ஏற்படும் நோய்களின் தாக்கம் குறைவு
தீமைகள்
  • எப்போதும் அமைக்கப்படும் கடினமான தரை அமைப்புகளை விட அதிக முதலீடு தேவை.
  • ஒரு முறை வடிவமைத்த பிறகு மீண்டும் மாற்றி அமைக்கும் வாய்ப்பு குறைவு
  • சிந்தப்பட்ட தீவனம், உருளைகளுக்கு இடையிலுள்ள ஓட்டைகள் வழியாக கீழே விழுந்துவிடும்.
  • ஈக்களின் தொல்லை அதிகம்.
மேலே செல்க

சாய்வான மற்றும் ஆழ்கூளத் தரை அமைப்பு


இம்முறையில் அடை வைக்க முட்டைகளை உற்பத்தி செய்யப் பயன்படும் கோழிகள், குறிப்பாக இறைச்சிக்கோழிகளை உற்பத்தி செய்யப் பயன்படும் இனப்பெருக்கக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கொட்டகை அமைப்பில் தரையின் ஒரு பகுதி சாய்வாக அமைக்கப்படுகிறது. பொதுவாக 60% தரை சாய்வாகவும், மீதம் உள்ள தரையில் ஆழ்கூளம் இடப்படுகிறது. தீவனத்தொட்டிகள் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள் சாய்வான தரை உள்ள பகுதிகளிலும், ஆழ்கூளம் உள்ள பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது. இனப்பெருக்கத்திற்கு பயன்படும் கோழிகளை வளர்க்கும்போது அவைகள் முட்டையிட பெட்டிகளும் வைக்கப்படுகின்றன.
நன்மைகள்
  • கடினமான தரை அமைப்பில் உற்பத்தி செய்வதை விட இந்த ஒரு குறிப்பிட்ட தரை அளவில் அதிகப்படியான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது.
  • சாய்வான தரை மட்டும் இருக்கும் கொட்டகைகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளை விட இந்த தரை அமைப்பில் வளர்க்கப்படும் கோழிகளிலிருந்து கிடைக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிப்புத் திறன் அதிகம்.
தீமைகள்
  • இந்த முறை தரை அமைப்பை அமைக்க மற்ற தரை அமைப்புகளை அமைப்பதை விட அதிகப்படியாக செலவாகும்.
  • ஈக்களின் தாக்குதலால் ஏற்படும் தொல்லைகள் மிகவும் அதிகம்.
மேலே செல்க

கூண்டு முறை வளர்ப்பு


இந்த முறையில் கோழிகள் கம்பிகளால் அமைக்கப்பட்ட சிறிய கூண்டுகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த கூண்டுகள் கொட்டகையின் தரையிலிருந்து கம்பிகள் போன்ற தாங்கிகள் அமைக்கப்பட்டு அவற்றின் மீதோ அல்லது கூரையிலிருந்து நேரடியாக தொங்குமாறோ அமைக்கப்படுகின்றன. இந்த முறை கோழிகளை குஞ்சுப்பருவத்திலிருந்து அவற்றை பண்ணையிலிருந்து நீக்கும் வரை வளர்க்க ஒரு சிறந்த முறையாகும். உலகிலுள்ள வணிக ரீதியாக வளர்க்கப்படும் 75% முட்டைக்கோழிகள் இம்முறை மூலமே வளர்க்கப்படுகின்றன. தீவன மற்றும் தண்ணீர் உள்ள தொட்டிகள் போன்ற அமைப்புகள் கூண்டுகளின் வெளிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் நிப்பிள் எனப்படும் தண்ணீர் அளிக்கும் உபகரணம் மட்டும் கோழிகள் அவற்றிலிருந்து நேரடியாகத் தண்ணீர் குடிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. தானியங்கி தீவனத்தொட்டிகளும், முட்டை சேகரிக்கும் உபகரணங்களும் கூட கூண்டுகளுடன் இணைக்கப்பட்டு சில நேரங்களில் அமைக்கப்படுகின்றன.

நன்மைகள்
  • கோழிகளுக்கு குறைவான இடவசதியே தேவைப்படும்.
  • ஒரு கோழியிலிருந்து அதிகப்படியான முட்டைகள் பெறலாம்.
  • குறைந்த தீவன சேதாரம்
  • தீவன மாற்றுத்திறன் சிறப்பாக இருத்தல்
  • அக ஒட்டுண்ணிகள் மற்றும் மண் மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பு
  • சுத்தமான முட்டை உற்பத்தி
  • முட்டைகளைக் குடித்தல், கோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்திக்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் குறைவு
  • நோயுற்ற மற்றும் உற்பத்தி செய்யாத கோழிகளை கண்டறிந்து உடனே பண்ணையிலிருந்து நீக்கிவிடுவது எளிது.
  • கோழிகளின் அடைகாக்கும் குணநலன் குறைதல்
  • ஆழ்கூளம் தேவைப்படாமை
  • செயற்கை முறை கருவூட்டல் செய்வதும் சுலபம் அல்லது செயற்கை முறை கருவூட்டலைப் பின்பற்றலாம்.
தீமைகள்
  • அதிக முதலீடு தேவை
  • கோழிகளின் எச்சத்தை கையாளுவது சிரமம். பொதுவாக இம்முறை வீடமைப்பில் ஈக்களின் தொல்லை அதிகம்.
  • முட்டைகளிலில் இரத்தத் திட்டுகள் காணப்படுவது அதிகம்.
  • முட்டைக்கோழிகளை நீண்ட நேரம் கூண்டுகளில் வைத்திருப்பதால் அவற்றின் கால்களில் வலி ஏற்பட்டு நொண்டும். கோழிகளுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் குறைபாடால் இந்நிலை ஏற்படுகிறது என்று கருதப்பட்டாலும் இதற்கு பல காரணங்கள் உள்ளன. கூண்டு முறை வளர்ப்பில் கோழிகள் இந்த பாதிப்பிற்கு அதிகம் உள்ளாகின்றன.
  • கறிக்கோழிகள் கூண்டுகளில் வளர்க்கப்படும் போது அவற்றின் நெஞ்சுப்பகுதியில் கட்டிகள் ஏற்படும். குறிப்பாக கறிக்கோழிகளின் உடல் எடை 1.5 கிலோவிற்கு மேல் அதிகரிக்கும் போது இந்நிலை ஏற்படுகிறது.
கூண்டுகளின் வகைகள்
கூண்டுகளில் அடைக்கப்படும் கோழிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூண்டுகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
  • ஒரு கோழி மட்டும் வளர்க்கப்படும் கூண்டு
  • நிறைய கோழிகள் வளர்க்கப்படும் கூண்டு (2-10 கோழிகள் வரை, பொதுவாக ஒரு கூண்டில் 3-4 கோழிகளை வளர்க்கலாம்).
  • காலனி கூண்டுகள் (ஒரு கூண்டில் 11க்கும் மேற்பட்ட கோழிகள்).
வரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கீழ்க்காணுமாறு கூண்டுகளை வகைப்படுத்தலாம்.
  • ஒரு அடுக்கு
  • இரு அடுக்கு
  • மூன்று அடுக்கு
  • நான்கு அடுக்கு
  • தட்டை அடுக்கு
கூண்டுகளின் வரிசை அமைப்புக்கேற்ப
1) படி போன்ற கூண்டு அமைப்பு
 
a) எம் வடிவ கூண்டுகள்
b) எல் வடிவக் கூண்டுகள்
2) பேட்டரி கூண்டுகள்
                        
வளர்க்கப்படும் கோழிகளின் வகையினைப் பொறுத்து
  1. குஞ்சுக்கோழிகளுக்கான கூண்டுகள்
  2. வளரும் கோழிகளுக்கான கூண்டுகள்
  3. இனப்பெருக்கத்திற்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கான கூண்டுகள்
  4. கறிக்கோழிகளுக்கான கூண்டுகள்

1) கோழிக்குஞ்சுகளுக்கான கூண்டுகள்
முன்னால் உள்ள தீவனமளிக்கும் பகுதி நீளம்    : 60 inch
முன் மற்றும் பின் உயரம் 12 இஞ்ச்
ஆழம் – 36 இஞ்ச்
கோழிக்குஞ்சுகளுக்கான கூண்டுகள் ஒரே வரிசையில் தட்டையாக ஒற்றை அடுக்கு அல்லது இரண்டு அடுக்குகளாக அமைக்கப்படவேண்டும். தீவனமளிக்கும் மற்றும் தண்ணீர் அளிக்கும் பகுதிகள் கூண்டுகளுக்கு வெளியே அமைக்கப்பட வேண்டும். தற்போது ஒரு நாள் வயதடைந்த குஞ்சுகளுக்குக் கூட நிப்பிள் முறை மூலம் தண்ணீர் அளிப்பது பின்பற்றப்படுகிறது. கூண்டுகளின் தரையில் முதல் 1-10 நாட்களுக்கு பழைய செய்தித்தாள்களை பரப்பி வைக்க வேண்டும். முதல் வார வயதில் மட்டும் கோழிக்குஞ்சுகளுக்கு தீவனத்தை கூண்டுகளின் உள்ளேயே அளிக்கவேண்டும்.

2) வளரும் பருவம்
முன்னால் உள்ள தீவனமளிக்கும் பகுதியின் நீளம் – 30இஞ்ச்கள்
Front & Back height     : 15 inch
ஆழம் – 18 இஞ்ச்
ஒரு கூண்டில் வளர்க்கப்படவேண்டிய 8-10 வார வயதிலான கோழிகளின் எண்ணிக்கை – 10

3) முட்டையிடும் கோழிகளுக்கான கூண்டுகள்
இரண்டு விதமான முட்டையிடும் கோழிகளுக்கான கூண்டுகள் திறந்த வெளி கோழிப்பண்ணைகளில் அமைக்கப்படுகின்றன.
  1. எப்பொழுதும் அமைக்கக்கூடிய கூண்டுகள்
  2. ரிவர்ஸ் கூண்டுகள்
a).எப்போதும் அமைக்கக்கூடிய கூண்டுகள்
                        
முன்புறமுள்ள தீவனமளிக்கும் பகுதியின் நீளம் – 15 இஞ்ச்
முன்புற உயரம் – 18 இஞ்ச்
பின்புற உயரம் – 15 இஞ்ச்
ஆழம் – 18 இஞ்ச்

b).ரிவர்ஸ் கூண்டுகள்
முன்புறமுள்ள தீவனமளிக்கும் பகுதியின் நீளம் – 18 இஞ்ச்
முன்புற உயரம் – 18 இஞ்ச்
பின்புற உயரம் – 15 இஞ்ச்
ஆழம் – 15 இஞ்ச்
இந்தக் கூண்டுகளில் 3 முதல் நான்கு கோழிகளை வளர்க்கலாம். இக்கூண்டுகள் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக வளர்க்கலாம். இவ்வாறு அடுக்குகளாக அமைக்கும்போது அவை 1/6 இஞ்ச் சரிவாக எப்போது அமைக்கப்படும் கூண்டுகளிலும், ரிவர்ஸ் கூண்டுகளில் 1/5 சரிவாகவும் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும்.

எப்போதும் அமைக்கப்படும் கூண்டுகளை விட ரிவர்ஸ் கூண்டுகளின் நன்மைகள்:
  1. ரிவர்ஸ் கூண்டுகளில் அதிகமான தீவனமளிக்கும் இடம் கிடைக்கும். எனவே கூண்டிலுள்ள அனைத்து நான்கு கோழிகளும் ஒரே சமயத்தில் தீவனம் எடுக்கமுடியும். ஆனால் எப்போதும் அமைக்கப்படும் கூண்டுகளில் ஒரே சமயத்தில் 3 கோழிகள் மட்டுமே தீவனம் எடுக்க முடியும். மற்றொரு கோழி பின்னால் காத்திருக்க நேரிடும்.
  2. முட்டைகள் உடையும் அளவு குறைவு
  3. ரிவர்ஸ் வகை கூண்டுகளில், எப்போதும் அமைக்கப்படும் கூண்டுகளை விட காற்றோட்டம் அதிகமாக இருக்கும்.
உயரத்தில் அமைக்கப்படும் கூண்டு முறை கொட்டகைகள்
கொட்டகையின் உயரம் காங்கிரீட் தூண்களால் 6-7 அடி வரை உயர்த்தப்படுகிறது. இரண்டு காங்கிரீட் தூண்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி 10 அடிகளாகும்.மூன்று எம் வடிவத்தில் கூண்டுகள் அமைக்கப்பட்டால் நான்கு பிளாட்பார்ம்கள் தேவை. இரண்டு எம் , மற்றும் இரண்டு எல் வடிவ கூண்டுகள் அமைக்க வேண்டுமெனில் மூன்று பிளாட்பார்ம்கள் தேவை. பிளாட்பார்ம்களை கட்டும்போது இரும்பு உருளைகள் அல்லது ராட்கள் மூலம் கூண்டுகள் பொருத்தப்படும். இரண்டு பிளாட்பார்ம்களுக்கு நடுவில் உபயோகப்படுத்தப்படும் கூண்டுகளைப் பொருத்து 6-7 அடி வரை இடைவெளி இருக்கும். கொட்டகையின் மொத்த உயரம் 20-25 அடியாகவும், அகலம் 30-33 அடியாகவும் இருக்கும். வெப்பமண்டல நாடுகளில் இந்த வகைக் கொட்டகைகளை அமைப்பதால் போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்கிறது.

பல்வேறு விதமான கோழிகளுக்குத் தேவைப்படும் இட அளவு

கோழிகளின் வகை

வயது (வாரங்களில்)
ஆழ்கூளம் (சதுர அடிகளில்)
கூண்டுகள் (சதுர அடிகளில்)
முட்டைக்கோழிகள் 0-8 0.60 0.20
9-18 1.25 0.30
>18 1.50 0.50
இறைச்சிக் கோழிகள் 0-4 0.30 -
4-8 0.75 -
 மேலே செல்க

அடை காத்தலும் குஞ்சு பொரித்தலும்

கோழி முட்டைகளை அடை காக்கும் இயந்திரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
சூடாக்கும் ஆதாரத்தைப் பொருத்து:
  • சூடான காற்று உள்ள முட்டை அடைகாப்பான்
  • சூடான தண்ணீர் உள்ள முட்டை அடைகாப்பான்
உபயோகிக்கப்படும் எரிபொருளைப் பொருத்து
  • வாயுவால் இயங்கும் முட்டை அடைகாப்பான்
  • எண்ணெயால் இயங்கும் முட்டை அடைகாப்பான்
  • மின்சாரத்தால் இயங்கும் முட்டை அடைகாப்பான்
குஞ்சு பொரிப்பகங்கள் உள்ள இடம்
நவீன முறையில் வடிவமைக்கப்படும் குஞ்சு பொரிப்பகங்கள், குஞ்சு பொரிப்பகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு பல அறைகளுடன் கட்டப்படுகின்றன. குஞ்சு பொரிப்பகம் உள்ள இடம் அதற்கென தனியாக அமைக்கப்பட்ட உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கான வாயில்களுடன் கோழிப்பண்ணையிலிருந்து தனியாக இருக்கவேண்டும். கோழிக்கொட்டகைகளிலிருந்து குஞ்சு பொரிப்பகம் குறைந்தது ஆயிரம் அடி தொலைவு தூரத்தில் இருந்தால் தான் கோழிக் கொட்டகைகளிலிருந்து குஞ்சு பொரிப்பகத்திற்கு நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.

குஞ்சு பொரிப்பகத்தின் அளவு
முட்டை அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிக்கும் இயந்திரங்களின் கொள்ளளவுக்கு ஏற்றவாறு குஞ்சு பொரிப்பகத்தின் அளவு இருக்கும். தவிரவும், ஒரு வாரத்தில் அடைக்காக வைக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் ஒரு வாரத்தில் பெறப்படும் குஞ்சுகளின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொருத்தும் குஞ்சு பொரிப்பகத்தின் அளவு மாறுபடும். மேலும் பிற்காலத் தேவைக்கேற்ப குஞ்சு பொரிப்பகத்தை விரிவு படுத்துவதற்குத் தேவையான இடமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

குஞ்சு பொரிப்பகத்தின் வடிவமைப்பு
குஞ்சுப் பொரிப்பகத்தில் ஒரு முனையில் முட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டு மற்றொரு முனையில் குஞ்சுகள் வெளியே எடுத்துச் செல்லும் வண்ணம் அமைக்கப்படவேண்டும். அதாவது எந்த ஒரு முட்டையும் அல்லது கோழிக்குஞ்சும் ஒரே வழியில் நேராக வெளியே அல்லது உள்ள செல்லுமாறு அமைக்கப்படவேண்டும். ஆனால் இவை பின்னோக்கி வரக்கூடாது. இதனால் குஞ்சு பொரிப்பகத்தில் உள்ள அறைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருப்பதுடன், மனிதர்களின் நடமாட்டமும் குறைக்கப்படுகிறது.

குஞ்சு பொரிப்பகத்தைக் கட்டுதல்
குஞ்சு பொரிப்பகத்தை கவனமாக வடிவமைத்து, முறையாக கட்டி, போதுமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாவன:
  • குஞ்சு பொரிப்பகத்தின் அகலம்:அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பான் இருக்கும் அறைகளின் அகலம் குஞ்சு பொரிப்பானின் வகையினைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. குஞ்சு பொரிப்பானின் அகலத்தைக் கணக்கிட்டு பிறகு அதனுடன் அருகில் வேலை செய்ய இடம், இயந்திரங்களுக்கும் சுவற்றுக்கும் இடையில் இடைவெளி, போன்றவற்றுக்காக இடத்தை ஒதுக்கி குஞ்சு பொரிப்பகத்தின் அகலத்தை முடிவு செய்யவேண்டும்.
  • கூரையின் உயரம்: கூரை 10 அடி உயரத்தில் அமைக்கப்படவேண்டும்.
  • சுவர்கள்: குஞ்சு பொரிப்பகத்தின் சுவர்கள் தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்கப்படவேண்டும். மேலும் இச்சுவர்கள் பூஞ்சான்களின் வளர்ச்சியை ஊக்குவிக்காத வண்ணமும் இருக்கவேண்டும்.
  • கூரை அமைக்கப் பயன்படும் பொருட்கள்: பெரும்பாலான குஞ்சுப் பொரிப்பகங்களில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும். குளிரான தட்பவெப்ப நிலையில் கூரையில் தண்ணீர் கசிவது பொதுவாக இருக்கும். எனவே கூரை அமைக்கப் பயன்படும் பொருள் தண்ணீரை உறிஞ்சாதவாறு இருக்கவேண்டும்.
  • கதவுகள்: குஞ்சு பொரிப்பகத்தின் கதவுகள் அகலமாக இருந்தால் தள்ளு வண்டிகள், குஞ்சுகளை எடுத்துச் செல்லும் பெட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும். கதவு நான்கு அடி உயரமும், நான்கு அடி அகலமும்,இரண்டு புறமும் திறக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.
  • தரை: குஞ்சுப் பொரிப்பகத்திலுள்ள அனைத்து தரைப்பகுதிகளும் காங்கிரீட்டினால் ஆனதாக இருக்கவேண்டும். சிமெண்ட் காங்கிரீட்டுக்கு இடையில் இரும்பு கம்பிகள் வைத்து தரையினை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் தரை விரிசல் விடாமல் இருக்கும். எல்லா காங்கிரீட் தரைகளும் வழவழப்பாக இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். காங்கிரீட் தரையின் சாய்வு 10 அடிக்கு 0.5 இஞ்ச்க்கு மேல் இருக்கக்கூடாது.
குஞ்சு பொரிப்பகத்தில் உள்ள அறைகள் மற்றும் இதர அமைப்புகள்

குஞ்சு பொரிப்பகத்தில் உள்ள அறைகள் போதுமான அளவு இருக்கவேண்டும். நடுத்தர அளவிலுள்ள குஞ்சு பொரிப்பகங்களில் வாரத்திற்கு இரு முறை குஞ்சுகள் பொரிக்கப்படும். ஆனால் பெரிய குஞ்சு பொரிப்பகங்களில் ஒரு வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் குஞ்சுகள் பொரிக்கப்படும். எனவே இதற்கேற்றவாறு குஞ்சு பொரிப்பகங்களில் உள்ள அறைகளின் அளவும் வேறுபடும்.

குளிக்கும் அறை
உயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதற்கு குஞ்சு பொரிப்பகத்துள் நுழையும் அனைவரும் குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டே உள்ளே செல்லவேண்டும். இந்த அறை மனிதர்கள் குஞ்சு பொரிப்பகத்தின் உள்ளே நுழைவதற்கும், வெளியே வருவதற்கும் உள்ள இடமாகும். மற்ற அறைகளைப் பொருத்தவரை மனிதர்களின் நடமாட்டத்திலிருந்து பெரும்பாலும் பிரிக்கப்பட்டே இருக்கும்.

குஞ்சு பொரிப்பதற்காக கருவுற்ற முட்டைகளை பெறும் இடம்
முட்டைகளை குஞ்சு பொரிப்பகத்திற்கு எடுத்து வரும் மனிதர்கள் குஞ்சு பொரிப்பகத்திற்குள்ளே செல்லக்கூடாது. இவ்வாறு எடுத்து வரும் முட்டைகளை வாங்குவதற்கென்று தனியாக ஒரு இடம் குஞ்சு பொரிப்பகத்தில் இருக்கவேண்டும்.

புகை மூட்டும் அறை
புகை மூட்டும் அறை எவ்வளவு சிறியதாக இருக்க முடியுமோ அவ்வளவு சிறியதாக இருக்கவேண்டும். இவ்வாறு இருப்பதால் புகை மூட்டப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் குறைந்த அளவே உபயோகப்படுத்தப்படும். குஞ்சு பொரிப்பகத்திற்குள் காற்றை சுழல வைப்பதற்கும், புகையினை வெளியேற்றுவதற்கும் ஒரு காற்றாடி புகை மூட்டும் அறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

முட்டையினை வைத்திருக்கும் அல்லது குளிர்வூட்டும் அறை
                                 
முட்டையை வைத்திருக்கும் அறை 8 அடி உயரமாகவும், கதகதப்பாகவும், மெதுவாக காற்றோட்டம் இருக்குமாறும், குளிர்ச்சியாகவும், இருக்கவேண்டும். இந்த அறை குளிர்வூட்டப்பட்டு அதன் வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றினை வெளியே தள்ளக்கூடிய குளிர்வூட்டும் இயந்திரம் அறை முழுவதும் ஒரே வெப்பநிலையினை பராமரிப்பதற்கு ஏற்றது.

அடைகாக்கும் அறை

இந்த அறையில் அடைகாப்பான்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் வைத்திருக்கும் அடைகாப்பான்களின் அளவிற்கேற்ப இந்த அறையின் அளவும் இருக்கவேண்டும். அடைகாப்பானுக்கு குறைந்த இட வசதி இருந்தாலே போதுமானது. இந்த அறையில் காற்று வெளியேறுவதற்கும் உள்ளே வருவதற்குமான சன்னல், முட்டைகளை நகர்த்துவதற்கும், குஞ்சுகளை வெளியே எடுப்பதற்கு வசதியாக இட வசதி இருக்கவேண்டும். ஒவ்வொரு குஞ்சு பொரிப்பானுக்கும் இடையில் குறைந்தது மூன்று அடி இடைவெளியும், குஞ்சு பொரிப்பானின் பின்பகுதிக்கும், சுவற்றும் இடையில் மூன்று அடி இடைவெளியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஒன்றையொன்று பார்த்தால் போல் அமைக்கப்பட்டிருக்கும் குஞ்சு பொரிப்பான்களுக்கு இடையில் 10 அடி இடைவெளி குறைந்தது இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

குஞ்சுகளை வைத்திருக்கும் அறை
அடைகாக்கும் அறைக்கு அடுத்த அறையில் குஞ்சுகளை வைத்திருக்கும் அறை இருக்கவேண்டும். இதில் 65% ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இதனால் குஞ்சுகளின் உடலிலிருந்து தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்படும். இந்த அறையில் குஞ்சுகளின் பாலினம் கண்டறியப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, தடுப்பூசி அளிக்கப்பட்டு பெட்டிகளில் வைக்கப்பட்டு தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

கழுவும் அறை
குஞ்சுகளைப் பெட்டிகளுக்குள் வைத்த பிறகு, குஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த தட்டுகளை கழுவுவதற்கு கழுவும் அறை பயன்படுகிறது. இந்த அறையில் அதிக அழுத்தத்துடன் தண்ணீர் வெளியேறுவதற்கு ஏற்ற வகையில் குழாய்கள் வைக்கப்பட்டிருக்கும்.

சுத்தமான அறை
குஞ்சுகள் வைத்திருந்த தட்டுகளை கழுவிய பிறகு, அவற்றை நகரும் வண்டிகளில் வைத்து, சுத்தமான அறைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

மேலே செல்க

அடைகாப்பதின் முக்கிய நோக்கம்

முட்டைகளை அடை காத்து குஞ்சு பொரிப்பதில் ஐந்து முக்கிய செயல்கள் உள்ளன. அவையாவன:
  • வெப்பநிலை
  • ஈரப்பதம்
  • காற்றோட்டம்
  • முட்டைகளின் அமைவு
  • முட்டைகளைத் திருப்புதல்
வெப்பநிலை
முட்டைகளை அடைகாக்கும்போது வெப்பநிலை ஒரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில் முட்டையினுள் வளரும் கருவானது சிறிய வெப்பநிலை மாற்றங்களை மட்டுமே தாங்கிக்கொள்ளும். உடற்செயலியல் வெப்பநிலை பூச்சியத்திற்கு மேல் சென்றால் மட்டுமே முட்டையினுள் இருக்கும் கருவானது வளர்ச்சியடையத் தொடங்கும். உடற்செயலியல் வெப்பநிலை பூச்சியம் எனப்படுவது, இந்த வெப்பநிலைக்குக் கீழ் கருவின் வளர்ச்சி நிறுத்தப்பட்டும், இதற்கு மேல் கருவின் வளர்ச்சி ஆரம்பிக்கப்படும் என்பதாகும். கோழி முட்டைகளின் உடற்செயலியல் பூச்சிய வெப்பநிலை என்பது 75 டிகிரி பாரன்ஹீட்டாகும் (24 oC). 
அடைகாப்பானில் கோழி முட்டைகள் அடைகாக்கும் காலத்தில் முதல் 18 நாட்கள் வெப்பநிலை 99.50 to 99.75 o Fஆகவும், குஞ்சு பொரிப்பானில் அடைகாக்கும் கடைசி மூன்று நாட்கள் இருக்க வேண்டிய வெப்பநிலை 98.5 o Fஆகும்.

ஈரப்பதம்
அடைகாக்கப்படும் போது முட்டைகளிலிருந்து வெளியேறும் ஈரப்பதத்தைப் பொருத்து அடைகாப்பானில் ஈரப்பதத்தின் அளவு பராமரிக்கப்படும். பொதுவாக அடை காப்பானில் பொருத்தப்பட்டிருக்கும் ஈரக்குழிழ் மற்றும் உலர்ந்த குமிழ் வெப்பநிலைமானிகளின் அளவுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை வைத்து ஈரப்பதம் அளவிடப்படுகிறது. அடைகாக்கும் காலத்தின் முதல் 18 நாட்களுக்கு 55-60% ஈரப்பதமும், கடைசி மூன்று நாளில் 65-75% ஈரப்பதமும் இருக்கவேண்டும். அதிகப்படியான ஈரப்பதம் குஞ்சு பொரிப்பகத்தில் இருந்தால், கோழிக்குஞ்சுகளின் உடலிலிருந்து தண்ணீர் வெளியேறி அவற்றின் உடலில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்.

காற்றோட்டம்
முட்டை அடைகாப்பான்களிலும், குஞ்சு பொரிப்பான்களிலும் காற்றோட்டம் நன்றாக இருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் வளரும் கருவின் முதல் நாள் வயதிலிருந்து அவை குஞ்சுகளாக வளர்ச்சியடையும் வரை போதுமான அளவு தூய ஆக்சிஜன் அதிகமுள்ள காற்று மிகவும் அவசியமாகும்.

கருவின் முதல் வளர்ச்சி காலத்தை விட கடைசி வளர்ச்சி காலத்தில் ஆக்சிஜன் தேவை மிகவும் அதிகமாக இருக்கும். கடல் மட்டத்தில் ஆக்சிஜனின் அளவு 21%. பொதுவாக அடைகாப்பானில் உள்ள காற்றிலுள்ள ஆக்சிஜனின் அளவு 21%. இதில் ஒவ்வொரு 1% ஆக்சிஜன் குறைந்தாலும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனில் 5% குறையும். 
கரு வளர்ச்சியடையும் போது நடக்கும் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் பொருட்களில் கார்பன் டை ஆக்சைடும் ஒன்றாகும். முட்டையினுள் உருவாகும் கார்பன் டை ஆக்சைடு முட்டை ஓட்டின் வழியாக வெளியே வருகிறது. நான்கு நாட்களுக்கு அடைகாப்பானில் வளரும் கரு தாக்குப்பிடிக்கும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 0.3% ஆகும். 0.5%க்கும் மேல் கார்பன்டை ஆக்சைடு அதிகமாக இருந்தால் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் குறையும். மேலும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 5%க்கும் மேல் இருந்தால் வளரும் கரு முற்றிலும் இறந்து விடும்.

முட்டைகளின் அமைவு
செயற்கையாக அடை காக்கப்படும் முட்டைகள் அவற்றின் அகலமான முனை மேலே இருக்குமாறு வைக்கப்படவேண்டும். இயற்கையாகவே வளரும் கோழிக்குஞ்சுகளின் தலை முட்டையின் அகலமான மேற்பகுதியில் காற்றுப்பைக்கு அருகில் இருக்கும். முட்டைகளை அடைக்கு வைக்கும் போது அவற்றின் குறுகலான முனை மேலே இருக்குமாறு வைத்தால் 60% கோழிக்குஞ்சுகளின் தலை குறுகிய முனையில் வளர்ச்சியடையும். எனவே முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் தருணத்தில் கோழிக்குஞ்சால் தன் அலகைப் பயன்படுத்தி முட்டை ஓட்டினை உடைத்து தன்னுடைய சுவாசத்தைத் துவக்க முடியாது. கிடை மட்டமாக வைக்கப்பட்ட முட்டைகள் அவைகளைக் குறித்த இடைவெளியில் அடிக்கடி திருப்பி விடுவதால் சாதாரணமாக வளர்ச்சி அடையும். சாதாரண சூழ்நிலைகளில் முட்டைகளை அவற்றின் அகன்ற மேல்பகுதி மேலே இருக்குமாறு முதல் 18 நாட்களுக்கும், கிடை மட்டமாக கடைசி மூன்று நாட்களுக்கும் வைக்க வேண்டும்.

முட்டைகளைத் திருப்பி விடுதல்
பறவைகள், பொதுவாக கோழிகளும், ஜப்பானியக்காடைகளும் அடைகாக்கும்போது தங்களுடைய கூட்டில் முட்டைகளைத் திருப்பிவிட்டுக் கொள்ளும். இதே போன்றே செயற்கை முறையில் அடைகாக்கும் போது முட்டைகளை ஒரு நாளைக்கு 8 முறை திருப்பி விட வேண்டும். அடைகாக்கும்போது முட்டைகளை திருப்பி விடுவதால் வளரும் கரு முட்டை ஓட்டில் ஒரு பக்கமாக ஒட்டிக்கொள்வது தவிர்க்கப்பட்டு கரு இறப்பதும் தடுக்கப்படும். பெரிய வணிக ரீதியான குஞ்சு பொரிப்பகங்களில் உள்ள குஞ்சு பொரிப்பானில் முட்டைகளைத் தானாகவே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திருப்பி விடப்படும் வசதி இருக்கும். பொதுவாக எல்லா முட்டைகளும் செங்குத்தாக 45oகோணத்திலும், பிறகு எதிர் திசையில் 45o கோணத்திலும் திருப்பி விட வேண்டும். 45oக்கு குறைவாக முட்டைகளைத் திருப்பி விட்டால் அதிகப்படியான குஞ்சு பொரிக்கும் திறன் இருக்காது. குஞ்சு பொரிப்பானில் முட்டைகளைத் திருப்ப வேண்டிய அவசியமில்லை.
காரணிகள் அடைகாப்பான் குஞ்சுபொரிப்பான்
வெப்பநிலை 99.50 to 99.75 o F 98.5 o F
ஈரப்பதம் 55-60 % 65-70 %
அமைவு அகன்ற பகுதி மேல் நோக்கி இருக்குமாறு கிடை மட்டமாக
திருப்புதல் கையால் திருப்புதல்- 8 முறைகள் தானியங்கி முறை மூலம் - 24 முறைகள் திருப்ப வேண்டியதில்லை

அடை காக்கும் முட்டைகளைக் கையாளுதல் மற்றும் சேமித்தல்

அடை வைக்கும் முட்டைகளைக் கோழிகள் இட்ட பிறகு அவற்றின் தரத்தை மேம்படுத்த முடியாது. ஆனால் அவற்றின் குஞ்சு பொரிக்கும் திறனை சில முறைகளைப் பயன்படுத்தி குறைக்காமல் பார்த்துக்கொள்ளலாம். 

இனப்பெருக்கக் கோழிக் கொட்டகையில் முட்டைகளின் தரத்தினைப் பராமரித்தல்

        கோழிகள் தங்களுடைய முட்டைகளை கூட்டிலுள்ள பொருட்களின் மேல் இடும். சுத்தமான, உலர்வான, பூஞ்சான் தாக்குதலற்ற பொருட்களைக் கூட்டுக்குள் வைப்பதால் முட்டைகள் அழுக்காவதையும், உடைவதையும் தடுக்கலாம். அதே போல கோழிகளைத் தரையில் முட்டையிடுவதற்குப் பதிலாக கூட்டுக்குள் முட்டையிடுவதற்குப் பழக்குவதற்கு அதிகப்படியான கூடுகளைக் கோழிகள் முட்டையிடுவதற்கு ஆரம்பிப்பதற்கு முன்பே கொட்டகையில் வைக்கலாம்.            
        கோழிகள் இட்ட முட்டைகளை அடிக்கடி சேகரிப்பது அவற்றின் தரத்தை தக்க வைப்பதில் ஒரு முக்கியமான அம்சமாகும். கொட்டகையில் கோழிகள் இட்ட முட்டைகளை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு முறை சேகரிக்கவேண்டும். கருவுற்ற முட்டைகள் எளிதில் நுண்கிருமிகளால் அசுத்தமடைந்து விடும். எனவே இதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எனவே முட்டைகளைக் கொட்டகையிலிருந்து எடுப்பதற்கு முன்னால் முட்டைகளை எடுப்பவர் தங்களுடைய கைகளை கிருமி நாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்த பிறகே முட்டைகளை சேகரிக்கவேண்டும்.முட்டைகளை அடுக்கப் பயன்படும் அட்டைகளும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, கரிமப் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடை வைப்பதற்கான முட்டைகளைத் தேர்வு செய்தல்
          இனப்பெருக்கக் கோழிகள் இட்ட அனைத்து முட்டைகளும் அடைக்கு வைக்க முடியாது. உடைந்த, அழுக்கான, ஒழுங்கற்ற வடிவமுடைய முட்டைகளை அடைகாப்பதற்கு பொதுவாக வைக்கப்படுவதில்லை. மிகவும் சிறிய அல்லலமு மிகவும் பெரிய முட்டைகளும் நடுத்தர அளவுடைய முட்டைகளுடன் ஒப்பிடும் போது நன்றாகக் குஞ்சு பொரிப்பதில்லை. மெல்லிய ஓடுடைய, அதிக ஓட்டைகள் உடைய முட்டைகளும், அவற்றிலிருந்து ஏற்பட்ட அதிகப்படியான நீர் இழப்பு காரணமாக சரியாகக் குஞ்சு பொரிப்பதில்லை.

அடைகாக்கும் முட்டைகள் அசுத்தமடைவதைத் தவிர்த்தல்
          சுகாதாரமற்ற அடை வைக்கப்படும் முட்டைகள் குறைந்த குஞ்சு பொரிக்கும் வீதத்திற்கும், தரம் குறைந்த குஞ்சுகளுக்கும் காரணமாகும். நுண்கிருமிகளற்ற முட்டை ஓடு என்பது இல்லவே இல்லை. முட்டைகளைக் கோழிகள் ஆசன வாய் வழியாக இடும்போதே எச்சத்திலிருந்தும், சிறுநீரிலிருந்தும் முட்டை ஓட்டில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டு விடும். முட்டை இடப்படும் போது அதன் ஓட்டிலிருக்கும் நுண்கிருமிகளின் எண்ணிக்கை 300-500 ஆக இருக்கும். முட்டை இட்டவுடன் எந்தப் பகுதிகளிலெல்லாம் முட்டை வைக்கப்படுகிறதோ அங்கிருந்த நுண் கிருமிகளால் அதன் ஓட்டுப்பகுதி அசுத்தமடையும்.முட்டை இடப்பட்டவுடன் அது குளிச்சியாக ஆரம்பிக்கும். இவ்வாறு குளிர்ச்சியாகும் போது முட்டையிலுள்ள உட்பொருட்கள் சுருங்க ஆரம்பித்து முட்டையின் உள்ளே எதிர்மறை அழுத்தம் ஏற்படும். இந்த நிலையில் தான் முட்டை ஓட்டிலுள்ள பாக்டீரியாக்கள் முட்டையின் உள்ளே செல்ல ஆரம்பிக்கும்.

முட்டையில் இயற்கையாகவே பாக்டிரியாக்களின் ஊடுருவலைத் தவிர்ப்பதற்கென சில செயல்முறைகள் இருக்கும். இது தவிர முட்டை ஓடும் பாக்டீரியாக்களின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ளும் திறனுடையது. முட்டை ஓட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் க்யூட்டிகிள் பகுதி பாக்டீரியாக்களின் தாக்குதலுக்கு சிறப்பான எதிர்ப்பு சக்தியினைப் பெற்றுள்ளது. முட்டை ஓட்டின் உள்ளே இருக்கும் உட்புற மற்றும் வெளிப்புற சவ்வுகளும் பாக்டீரியாக்கள் உள்ளே வருவதைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவர்களாகச் செயல்படுகின்றன. முட்டையின் வெள்ளைக் கரு அல்லது அல்புமின் சிறிதளவு அசுத்தமடைவதைத் தடுக்கும் சக்தியுடையது. அல்புமினின் அமிலகாரத்தன்மை அதிகமாக இருப்பதால், அந்த அமிலக் காரத்தன்மையில் பாக்டீரியாக்கள் உயிரோடு இருக்க முடியாது. முட்டையின் உட்பகுதியிலுள்ள சலேசாவில் லைசோசைம் எனும் நொதி உள்ளது. இந்த நொதியிலும் பாக்டீரியாக்களுக்கான எதிர்ப்புத் திறன் இருக்கிறது.

கோழிகளை இனப்பெருக்கம் செய்து முட்டையினை வணிக ரீதியாக உற்பத்தி செய்பவர்கள் முட்டையின் மேற்புறத்தில் பாக்டீரியாக்களின் அளவினைக் குறைப்பதற்கு சில முறைகளைக் கையாளுகின்றனர். கருவுற்ற முட்டைகளை மணல் கொண்டு மூடி வைப்பது, துடைப்பது போன்றவை கருவுற்ற முட்டைகளை சுத்தப்படுத்தும் சரியான முறைகள் அல்ல. மணல் கொண்டு மூடி வைப்பதால் முட்டை ஓட்டின் வெளிப்பகுதியிலுள்ள க்யூட்டிகிள் பகுதியினை சேதப்படுத்தி விடும். பார்மால்டிஹைடு வாயு மூலம் புகை மூட்டுவது கருவுற்ற முட்டைகளை சுத்தப்படுத்தும் சிறந்த முறையாகும். குவார்ட்டனரி அமோனியம் பொருட்கள், ஃபார்மலின், ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனங்கள் கலந்த கரைசல்களும் முட்டைகளின் மீதுள்ள பாக்டீரியாக்களின் அளவினைக் குறைப்பதற்கு உதவி புரிகின்றன. தேவையில்லாமல் கருவுற்ற முட்டைகளைக் கழுவக்கூடாது. கருவுற்ற முட்டைகளைக் கழுவ வேண்டிய அவசியம் இருந்தால் முட்டையின் வெப்பநிலையினை விட அதிக வெப்பநிலையிலுள்ள தண்ணீரில் சுத்தமான துணியினை நனைத்து அதை வைத்து முட்டையினைத் துடைக்க வேண்டும். இதனால் முட்டையின் ஓட்டிலுள்ள ஓட்டைகளின் வழியாக அழுக்குகள் வேர்த்து வெளியே வந்து விடும். எப்போதும் முட்டைகளின் வெப்பநிலையினை விட குறைவான வெப்பநிலையினை உடைய தண்ணீரில் துணியினை நனைத்து முட்டைகளைத் துடைக்கக்கூடாது. மேலும் முட்டைகளை தண்ணீரில் நனைக்கக்கூடாது.

கருவுற்ற அடைகாக்கும் முட்டைகளை சேமித்து வைத்தல்
          பொதுவாக குஞ்சு பொரிப்பகங்களில் முட்டைகளை கோழிகள் இட்டவுடனேயே அடை வைப்பதில்லை. பெரும்பாலான குஞ்சு பொரிப்பகங்கள் முட்டைகளை வராத்திற்கு இரண்டு முறை மட்டுமே அடை வைக்கின்றன. கருவுற்ற முட்டைகளை ஒரு வாரத்திற்கு சேமித்து வைக்க வேண்டுமென்றால் அவற்றை முட்டைகள் சேமித்து வைத்திருக்கும் அறையில் 65 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையிலும் 75 சதவிகிதம் ஈரப்பதத்தில் வைத்திருக்க வேண்டும். பத்து நாட்களுக்குக் குறைவாக முட்டைகளை சேமித்து வைக்கும் போது அவற்றின் அகலமான முனை மேலே இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். பத்து நாட்களுக்கு மேலாக முட்டைகளை சேமித்து வைக்கும் போது அவற்றின் குறுகிய முனை மேலாக இருக்குமாறு வைத்திருந்தால் முட்டைகளின் குஞ்சு பொரிப்புத் திறன் அதிகமாகும்.
மேலே செல்க

குஞ்சு பொரிப்பகத்தின் செயல்பாடுகள்


அதிக எண்ணிக்கையிலான கோழிக்குஞ்சுகள் கருவுற்ற முட்டைகளிலிருந்து உருவாக்குவது குஞ்சு பொரிப்பகத்தின் செயல்பாடாகும். இது தவிர கோழிக்குஞ்சுகளைக் குறைவான செலவில் உற்பத்தி செய்வதும் இதன் மற்றொரு முக்கியமான நோக்கமாகும். வணிக ரீதியாக செயல்படும் குஞ்சு பொரிப்பகத்தின் செயல்பாடுகள் பின்வருமாறு.

  • கருவுற்ற முட்டைகளைப்பெறுதல்
  • கருவுற்ற முட்டைகளை அட்டைகளில் அடுக்குதல்
  • புகை மூட்டம் செய்தல்
  • முட்டைகளைக் குளிர் பதனம் செய்தல்
  • முட்டைகளை அடை வைப்பதற்கு முன்பாக அவற்றின் வெப்பநிலையினை அதிகரித்தல்
  • முட்டைகளை ஏற்றுதல்
  • முட்டைகளில் கரு உயிரோடு இருக்கிறதா என்பதை கண்டுபிடித்தல்
  • முட்டைகளை மாற்றுதல்
  • பொரித்த குஞ்சுகளை வெளியே எடுத்தல்
  • கடினப்படுத்துதல்
  • கோழிக்குஞ்சுகளைத் தரம் வாரியாகப் பிரித்தல்
  • பாலினத்தைக் கண்டறிதல்
  • தடுப்பூசி போடுதல்
  • குஞ்சுகளை பண்ணைகளுக்கு அனுப்புதல்
  • கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல்
  • கழிவுகளை அப்புறப்படுத்துதல்
கருவுற்ற முட்டைகளைப் பெறுதல்
          கருவுற்ற முட்டைகளைக் குஞ்சு பொரிப்பகங்கள் கீழ்க்கண்டவர்களிடமிருந்து பெறுகின்றன:
  • தங்களுடைய சொந்த இனப்பெருக்கம் செய்யும் கோழிகளிலிருந்து
  • மற்ற இனப்பெருக்கக் கோழிப் பண்ணைகளிலிருந்து
  • மற்ற குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து
கருவுற்ற முட்டைகளை அடைகாப்பானில் உள்ள அட்டைகளில் அடுக்குதல்
          முட்டைகளை இனப்பெருக்கக் கோழிகளிடமிருந்து பெற்ற உடனே, அட்டைகளில் அடுக்க வேண்டும்.

கருவுற்ற முட்டைகளைப் புகைமூட்டம் செய்தல்
          முட்டைகளை அட்டைகளில் அடுக்கிய பின்பு, புகை மூட்டுவதற்காக புகை மூட்டும் அறையில் வைக்க வேண்டும். மூன்று மடங்கு திறனுடைய ஃபார்மால்டிஹைடு கரைசலின் மூலம் 20 நிமிடத்திற்கு புகை மூட்டுவதால் முட்டையின் ஓட்டிலுள்ள 97.5 முதல் 99.5% கிருமிகள் கொல்லப்பட்டு விடும். ஒரு மடங்கு திறன் எனப்படுவது ஒரு கன அடிக்கு 20 கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட் தூளை 40 மிலி ஃபார்மால்டிஹடு கரைசலில் கலந்து உபயோகப்படுத்துவதாகும் (மூன்று மடங்கு என்பது 60 கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட்டுடன் 120 மிலி ஃபார்மால்டிஹடு கரைசலுடன் கலந்து 100 கன அடிக்கு உபயோகப்படுத்துவதாகும்.

முட்டைகளைக் குளிர் பதனம் செய்து சேமித்தல்
          முட்டைகளைப் பெற்றவுடன் உடனடியாக அடை வைக்கவில்லை எனில் அவற்றை 65 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், 75% ஈரப்பதமும் உள்ள குளிர் பதன அறையில் வைத்து சேமிக்கலாம்.

முட்டைகளை அடை வைப்பதற்கு முன்பாக வெதுவெதுப்பாக்குதல்
          முட்டைகளை அடைகாப்பானில் அடை வைப்பதற்கு முன்பாக, அவற்றை குளிர் பதன அறையிலிருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்போது வளி மண்டலத்திலுள்ள காற்று முட்டை ஓட்டின் மீது பட்டு குளிர்ந்து நீர்த்திவலைகளாக மாறும். இதற்கு வேர்த்தல் என்று பெயர். முட்டைகளை அடைகாப்பானில் வைப்பதற்கு முன்பாக முட்டைகளை அறை வெப்பநிலையினை அடையுமாறு வைப்பதால் குளிர்ந்த முட்டைகளால் அடை காப்பானின் வெப்பநிலை குறைந்து விடுவது தடுக்கப்படுகிறது.

முட்டைகளைஏற்றுதல்
          முட்டைகளை அடைகாப்பானில் வைப்பது முட்டைகளை ஏற்றுதல் என்று அழைக்கப்படுகிறது. முட்டைகளை மொத்தமாகவோ அல்லது தனித்தனிக் குழுக்களாகவோ அடைகாப்பானில் வைக்கலாம். பெரும்பாலான வணிகரீதியாக செயல்படும் குஞ்சு பொரிப்பகங்களில் முட்டைகளைக் குழுக்களாக அடை வைக்கின்றனர். இதனால் அடைகாப்பானில் அடைகாக்கும் வெப்பநிலை சீக்கிரம் அடைந்து விடுகிறது. இவ்வாறு குழுக்களாக முட்டைகள் அடை வைக்கப்படும் போது குஞ்சு பொரிப்பகத்திலுள்ள ஒவ்வொரு அடை காப்பானிலும் முட்டைகள் பல்வேறு விதமான கரு வளர் நிலையிலிருக்கும்.

முட்டைகளில் கரு உயிரோடு இருக்கிறதா என்பதை கண்டுபிடித்தல்

முட்டையினுள் உள்ளிருக்கும் கருவின் வளர்ச்சி நிலையினை பார்ப்பதற்கும், முட்டை ஓட்டில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய முட்டைகளை ஒரு ஒளி ஆதாரத்தின் மீது வைத்து கண்டறியலாம். முட்டைகளை அடை வைத்த 5ம் நாள் முதல் அவற்றை ஒளி ஆதாரத்தின் அருகில் வைத்துப் பார்க்கலாம். ஆனால் இந்நிலையில் கருவில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளைக் கண்டறிவது கடினம். வணிகரீதியாகச் செயல்படும் குஞ்சு பொரிப்பகங்களில் முட்டைகள் அடைகாப்பானிலிருந்து குஞ்சு பொரிப்பானுக்கு மாற்றப்படும் நாளன்று (அடை வைத்து 19ம் நாள்) ஒளி ஆதாரத்திற்கு அருகில் வைத்துப் பார்க்கப்படுகின்றன. இரண்டு முறையில் கேண்டிலிங் எனப்படும் ஒளி ஆதாரத்திற்கு அருகில் வைத்து கருவின் வளர்ச்சியினைக் கண்டறிவது செய்யப்படுகிறது. விரைவாகச் செயல்படும் முறையில் முட்டைகளை ஒரு மேசை அல்லது பெரிய கருவியின் மீது முட்டை அட்டையிலுள்ள அனைத்து முட்டைகளையும் அட்டையோடு வைத்து குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன. தனித்தனியாக முட்டைகளை கேண்டலிரில் வைத்துப் பார்ப்பது நேரம் அதிகமாகத் தேவைப்படும் என்றாலும் அதுவே மிகவும் நுண்ணிய முறையாகும்.

முட்டைகளை மாற்றுதல்
          நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட குஞ்சு பொரிப்பான்களில் முட்டைகள் அடைகாப்பானிலிருந்து அடை வைத்த 19ம் நாள் (கோழி முட்டைகள்) அல்லது அடை வைத்த முட்டைகளில் 1% முட்டைகளில் குஞ்சுகள் முட்டை ஓடுகளை ஓட்டையிட்ட பிறகோ குஞ்சு பொரிப்பான்களுக்கு மாற்ற வேண்டும்.

பொரித்த குஞ்சுகளை வெளியே எடுத்தல்
          குஞ்சுகள் பொரித்து அவற்றின் உடல் 95% உலர்ந்த பிறகு அவற்றை குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து வெளியே எடுத்து விட வேண்டும். குஞ்சு பொரிப்பகங்களில் குஞ்சுகள் முற்றிலுமாக உலருவதைத் தடுக்க வேண்டும்.

கடினப்படுத்துதல்
          பொரித்த குஞ்சுகளை பண்ணைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக அட்டைப் பெட்டிகளில் வைக்கும் போது, அவற்றின் அடி வயிற்றுப் பகுதி மென்மையாக இருப்பதாலும், அவற்றின் உடல் முற்றிலும் உலராததாலும் அவைகளால் நிற்க முடியாது. எனவே பெட்டிகளில் குஞ்சுகளை அடைப்பதற்கு 4 முதல் 5 மணி நேரத்திற்கு முன்பாக அவற்றைக் கடினப்படுத்த வேண்டும். இவ்வாறு கடினப்படுத்துவதால் குஞ்சுகளைத் தரம் வாரியாகப் பிரிப்பது எளிதாவதுடன், குஞ்சுகளின் பாலினத்தை எளிதாகக் கண்டறியலாம்.

குஞ்சுகளைத் தரம் வாரியாகப் பிரித்தல்
          குறைந்தபட்ச தரம் இல்லாமல் எந்த ஒரு கோழிக் குஞ்சும் நுகர்வோரைச் சென்றடையக் கூடாது. கோழிக்குஞ்சுகளின் தரத்தினை மதிப்பிடும் வரைமுறைகளாவன 1. உடலமைப்பில் குறைபாடுகள் இல்லாமல் இருத்தல் 2. தொப்புள் பகுதி நன்றாக மூடி ஆறியிருக்க வேண்டும் 3. குறைந்த பட்ச எடை இருத்தல் 4. நன்றாக நிற்பது.

பாலினத்தைக் கண்டறிதல்
          முட்டைக்கோழிக் குஞ்சுகளை பண்ணைகளுக்கு அனுப்புவதற்கு முன்பாக அவற்றின் ஆசன வாய்ப்பகுதியில் பரிசோதித்தோ அல்லது அவற்றின் இறகுகளின் அமைப்பை வைத்தோ பாலினம் வாரியாகப் பிரிப்பது மிகவும் அவசியமான செயல் முறையாகும்.

தடுப்பூசி போடுதல்
          குஞ்சு பொரிப்பகங்களில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான கோழிக்குஞ்சுகளுக்கு பண்ணையாளர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாகவே அவற்றுக்கு மேரக்ஸ் நோய்க்கெதிரான தடுப்பூசி அளிக்கப்படுகிறது. பெரும்பாலான கோழிக்குஞ்சுகளுக்கு அவற்றின் கழுத்துப் பகுதியில் தோலுக்கடியில் தடுப்பூசி போடப்படுகிறது.

குஞ்சுகளைப் பண்ணைகளுக்கு அனுப்புதல்
          குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து கோழிக்குஞ்சுகளைப் பண்ணைகளுக்கு அனுப்பும் போது அவை பண்ணைகளை அதிகாலையில் செல்லுமாறு திட்டமிட்டு அனுப்பி வைக்க வேண்டும். அதிகாலையில் தட்ப வெப்பநிலை குளிர்ச்சியாக இருப்பதுடன், குஞ்சுகள் காலையில் வந்தால் நாள் முழுவதும் அவற்றை கவனிப்பவர்கள் நுணுக்கமாக கவனிப்பதற்கு உதவியாக இருக்கும்.

கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல்
          ஒவ்வொரு குழு குஞ்சு பொரித்ததற்குப் பின்னும் குஞ்சு பொரிப்பகத்தை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமான செயல் முறையாகும். இந்த சுத்தம் செய்யும் செயல்முறை முழுமையாக இருக்கவேண்டும்.

கழிவுகளை அப்புறப்படுத்துதல்
          கருவுறாத முட்டைகள், குஞ்சு பொரிக்காத முட்டைகள், இறந்த கோழிக்குஞ்சுகள், கழித்த குஞ்சுகள் போன்றவற்றை குஞ்சு பொரிப்பகத்திற்கு அருகில் உள்ளவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இக் கழிவுப் பொருட்கள் குஞ்சு பொரிப்பகத்தை அசுத்தப் படுத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலே செல்க