Tuesday, March 8, 2016

நேர்மை, ஆர்வம்! தொழிலில் உயரம்!

கோழி வளர்ப்பில் உள்ள சுவாரசியங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு சுவராசியங்கள் இருப்பதாக தெரிய வரலாம். ஆனால் எங்களுக்கு இந்தத் தொழிலில் எது மிகவும் சிறந்தது என்று நினைக்கிறோமோ அதைச் செய்கிறோம். தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு எதையும் செய்வதில்லை. இன்றைக்கு இருக்கிறதை விட இன்னும் இதைச் செய்தால் சிறப்பாக இருக்குமே என்று நல்ல ஆலோசனைகள் எங்கிருந்து வந்தாலும் அதைச் செயல்படுத்திப் பார்க்க தயங்குவதில்லை என்பதால், எங்களுக்குப் பெரிதாக கோழி வளர்ப்பில் சுவராசியங்கள் தெரியவில்லை. ஆனால் தறபொழுது இந்தத் துறையானது நிறைய தொழில் நுட்பவளர்ச்சி அடைந்துள்ளது. உதாரணமாக ஒரு முட்டையிலிருந்து குஞ்சு உருவாக்குவதற்கு தேவையான 21 நாட்களும் இங்குபேசன் தேவைப்படுகிறது. ஒரு சிலர் முட்டையிருந்தால் போதும் நான்கைந்து நாட்களில் குஞ்சு கிடைத்துவிடும் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரினங்களுக்கும் இருக்கக்கூடிய இயற்கை பரிணாமம் கோழிக்கும் இருக்கிறது. அதனால் மிசின் மூலம் குஞ்சு பொறிக்க வைத்தாலும், கோழி மூலம், அடைகாத்து குஞ்சு பொறிக்க வைத்தாலும், 21 நாட்கள் காத்திருக்கத்தான் வேண்டும். மிஷினில் முதல் நாளிலிருந்து 21 நாட்கள் வரை முட்டையில் இருக்கும் கருவிற்கு எந்த அளவு வெப்பநிலை, ஈரப்பதம், பாதுகாப்பு, சுற்றுப்புறச் சூழல் வேண்டும் என்பதையெல்லாம் சரிவர கவனிக்க வேண்டும். பின்பு அதைச் சரிவர கொடுக்கும் போது கருவளர ஆரம்பிக்கிறது. அடைகாக்கும் கோழி முறையிலும் இம்முறை பின்பற்றப்படுகிறது என்றாலும் கோழி உணவுக்காக வெளியிடம் செல்ல வேண்டியிருப்பதால் குஞ்சு பொறித்தலில் எண்ணிக்கை குறைந்து போகிறது. ஆனால் தொழில் நுட்ப முறையில் சரியான அளவு வெப்பநிலை தரப்படுவதால் குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகம் கிடைக்கிறது. கிடைத்த குஞ்சு ஆரோக்கியமானதாக, வளர்ச்சியடைந்ததாக இருக்கிறது. மேலும் குஞ்சுகளை பண்ணையாளர்களுக்கு கொடுத்த முதல் நாளிலிருந்து 40 நாட்கள் வரை ஒவ்வொருநாளும் எந்த முறையில் குஞ்சுகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை அட்டவனையாகவே பண்ணையாளர்களுக்குத் தந்து விடுகிறோம். தினந்தோறும் 8000 கிராமங்களில் உள்ள 15 ஆயிரம் பண்ணைகளுக்கும் எங்கள் நிறுவன அலுவலர்கள் சென்று கவனிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். தேவையான அத்தனை தொழில்நுட்பங்களும் சரிவர இவர்களால் சென்று சேர்வதால் தரமான கோழிகளை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமாக எங்கள் உற்பத்தியை தரமுடிகிறது.
பாக்கெட் முறையில் சிக்கன் விற்பனையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். வாடிக்கையாளர் மத்தியில் எந்தளவு இது வரவேற்பை பெற்றிருக்கிறது?
பாக்கெட் முறையில் சிக்கன் விற்பனையானது மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. இந்தியா, வியட்நாம், இந்தோனியா, பாகிஸ்தான், வங்காளதேசம் இந்நாடுகளைத் தவிர மற்ற உலக நாடுகளில் உயிர்க்கோழி மார்க்கெட்டிங் என்பது கிடையாது. கண்முன்னால் உயிருடன் உள்ள கோழியை வெட்டித் தருவது என்பதெல்லாம் கிடையாது. எல்லாமே பாக்கெட் முறைதான். அதனால் நாளடைவில் நம் நாட்டிலும் அந்த மாற்றம் வரும். பாட்டில் தண்ணீர், பாக்கெட் பால் போன்றவைகளை எப்படி மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ அதே போல், இன்னும் சில வருடங்களில் இம்முறையையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் வரும். பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் சிக்கனானது ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும் தன்மையுடையது. ஆனால் கண்முன்னே வெட்டி எடுத்துப் போகும் சிக்கனானது ஒரு நாளைக்கே தாங்காது. காரணம் வெப்பநிலை மாறுபாடுதான். வெப்பநிலையை குறைத்துவிட்டால் அது ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். அதனால் மக்களின் வாழ்க்கை முறைமாற மாற பொருளாதாரத்தில் உயர உயர 5லிருந்து 10 ஆண்டுக்குள் நம் நாட்டில் பாக்கெட் சிக்கன் விற்பனையானது சந்தையில் 10% இருக்கக்கூடும்.
உங்கள் பண்ணை அமைப்பு முறையில் ஏதேனும் மாற்றங்களை உருவாக்கி இருக்கிறீர்களா?
உற்பத்தி பிரிவில் நிறைய மாறுதல்கள் செய்திருக்கிறோம். முதலில் சிக் புரொடக்சனில் சாதாரண மிஷின் தான் இருந்தது. இது தான் நமது இந்தியாவில் 80லிருந்து 85% வரை உள்ளது. ஆனால் தற்பொழுது நாங்கள் எங்கள் செயல்பாட்டில் முதல் நாளிலிருந்து முட்டையின் கருவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் முழுமையாக புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி கணினியாக்கியிருக்கிறோம். அதில் எந்த குறைபாடு ஏற்பட்டாலும் அறிவிப்பு கிடைக்கப்பெற்று விடும். மேலும் தட்பவெப்பநிலை எல்லா நேரங்களிலும் கோழிக்கு சரிவர கிடைக்குமளவு குளிரூட்டப்பட்ட பண்ணைகளை அமைக்க குளிரூட்டப்பட்ட பணைகளை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இதற்கான மாதிரி பண்ணைகளை மதுரையிலும், ஹைதராபாத்திலும் அமைத்திருக்கிறோம்.
இது சரியானதாக பயனுள்ளதாக கருதப்பட்டால் மேற்கொண்டு பண்ணையாளர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு, வரும் காலங்களில் குளிரூட்டப்பட்ட பண்ணைகளையே அமைக்க முயற்சிகள் மேற்கொள்வோம். மேலும்
கோழி தான் எடுத்துக்கொள்ளும் உணவை கொத்திதிண்ணும் பொழுது சத்துள்ள பொருளை மட்டுமே தேடி எடுத்து திண்ணும். அதனால் தற்பொழுது மக்காச்சோளம், கோதுமை இவைகளைக் கெட்டியாக்கி ஒரே நேரத்தில் எல்லா நியூட்ரிசன்களும் உணவாகும் முறையை செயல்படுத்த 1998ல் தொழிற்கூடம் உடுமலைப் பேட்டையில் இருக்கிறது. இதனையே 3000 டன் உற்பத்தியைத் தருமளவு 4 கிளைகளை தற்பொழுது 70 கோடி செலவில் அமைத்து வருகிறோம். புரோட்டீன், எனர்ஜி எனத் தனித்தனியாக கோழி உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்கவே இம்முறையை செயல்படுத்தியிருக்கிறோம். உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை அதிகம் பெற்று கோழி வளர்ப்பில ரஷ்யா, பிரேசிலும் ஆசியாவில் தாய்லாந்தும் முன்னணி வகிக்கிறது.
தொழிலில் போட்டியாளர்களை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகிறீர்கள்?
ஒருத்தர் மட்டுமே இந்த தொழிலுக்கான மார்க்கெட்டை முழுமையாக கைப்பற்றிட முடியாது என்பதால் பலபேர் வரத்தான் செய்வார்கள். அப்படி வருகின்றவர்களுடன் எங்களுக்குள் போட்டி என்பது இல்லை. அடுத்தவர்களைக் காட்டிலும் நாம் எந்தளவுக்கு வித்தியாசமாய் செயல்படுகிறோம் என்பதில் தான் வளர்ச்சி இருக்கிறது.
  • சிறந்த உணவு முறை.
  • சிறந்த RND (Researh & Development) முறை.
  • குறைவான செலவில் நிறைவான உற்பத்தி,
  • கோழிக்குத் தேவையான மக்காச்சோளம், சோயாபீன்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சந்தையில் வாங்காமல் நேரடியாக விவசாயிகளிடமும், நாங்களே தனியாக யூனிட் அமைத்தும் உற்பத்தி செய்தல்.
  • கொள்ளளவை அதிகப்படுத்தி கோழியை உற்பத்தி செய்யும் செலவை குறைவாக்குதல்
  • மற்றவர்களின் உற்பத்தி கோழிச் சுவையை விட எங்களின் உற்பத்தியில் உருவான கோழிக்கு சுவையைக் கூடுதலாக்கியிருத்தல்.
  • கோழியில் கொழுப்பு அதிகம் உருவாகாமல் வளர்ச்சியைக் கொடுத்திருத்தல்.
  • 13 மாநிலங்களில் நிர்வாக முறையில் மேம்பாடு
  • இன்னும் 5 வருடங்களில் நாம் எந்தளவு வளர்ந்திருக்க வேண்டும் என்பதற்கான செயல்பாடுகளை இன்றைக்கு வேலையாக எடுத்துக்கொண்டு செயல்படுதல்.
  • தனியாக IT பிரிவு
  • 200க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை ஓரிடத்திலிருந்து செயல்படும் அளவு கணினி மையமாக்கியிருத்தல் இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
தரம், நம்பகத்தன்மை இந்த இரண்டும் வியாபாரத்தில் சரிவர இருந்தால் யாருக்கும் நாம் பயந்து தொழில் புரியத் தேவையில்லை. நாளும் வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.
புதிதாக பண்ணை அமைக்க பண்ணை அமைப்பாளரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் விசயங்கள்?
பண்ணை அமைக்க விரும்புவர்களுக்கு விவசாய நிலம் அவசியம் இருக்க வேண்டும். தண்ணீர் வசதி நன்றாக, தரமானதாக இருக்க வேண்டும். இவை சரிவர இருந்தால் வங்கியில் கடனுதவி பெற்றுத் தந்து பண்ணை அமைக்க உதவுகிறோம். முக்கியமாக விவசாயத்தை நம்பி மட்டுமே இருக்கக்கூடியவர்களுக்கு அதிக வாய்ப்புகள் தருகிறோம். எங்களுக்கு வருடம்தோறும் 30% அளவு புதிதாக பண்ணையாளர்கள் உருவாகி வருகிறார்கள்.
ஒரு நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு நீங்கள் சொல்ல விரும்பும் காரணம்?
  • ஆரம்ப காலத்தில் கடின உழைப்பு அவசியமாகிறது.
  • வளர்ந்த பிறகு திட்டமிட்டு செயல்படுதல் (strategy) முக்கியம். மேலும் செய்யும் தொழிலில் புதுமையைப் புகுத்தி மற்ற தொழில் நிறுவனங்களிலிருந்து வித்தியாசப் படுத்திக் கொண்டு தரத்திலும், நம்பகத் தன்மையிலும் என்றைக்குமே உயர்ந்தவைகளாகவே இருத்தல்.
  • தொழிலாளர்களை சரியாக தேர்வு செய்தல்.
  • அவர்களை செய்யும் தொழிலுடன் ஒன்றைச் செய்தல். அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல்.
கிராமப்புறத்திலிருந்து மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி வரக் காரணம்?
கிராமத்திலிருந்து நிறையப் பேர் நகர்ப்புறத்தை நோக்கி வரக் காரணம் தொழிற்சாலைகள் அதிகம் இல்லாதது. அத்தியாவசியத் தேவைகள் போதுமான அளவு இன்னும் கிராமங்களுக்கு கிடைக்காதது. விவசாயத்தில் நம்பிக்கை இல்லாதது. இப்படி நிறையக் காரணங்களை சொல்லலாம். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கிராமப்புற மக்களுக்கான வேலைகளை நன்றாக வளர்த்தி போதுமான வருமானம் அவர்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்.
அசைவம் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்கிறார்களே?
ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு உணவாக இருந்திருக்கிறது. அசைவம் உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் அடிப்படைத் தேவை. இதில் உணவு என்று நாம் எடுத்துக் கொள்ளும்போது, ‘புரோட்டீன்’ அவசியமாகிறது. இந்த புரோட்டீனை நாம் இரு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று சைவம் (பருப்பு, காய்கறி வகைகள்), இன்னொன்று அசைவம் மேலை நாடுகளில் ஒரு மனிதன் ஒரு வருடத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடிய அசைவ உணவு 120 கிலோ. ஆனால், நம் இந்தியாவில் 31/2 கிலோ மட்டும்தான்.
சரிவிகித உணவு நன்றாக இருக்க வேண்டும் என்றால் புரோட்டீன் நமக்கு தேவைப்படுகிறது. அது அசைவம் மூலமாக எளிதாக கிடைக்கிறது அதனால் தேவையறிந்து சரிவர எடுத்துக் கொண்டால் அசைவ உணவு உடலுக்குப் பகையல்ல.
இந்தியாவில் 85% மக்கள் அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என ஆய்வொன்று கூறுகிறது. இது மேலைநாடுகளில் 98%வரை இருக்கிறது. மூன்று வேளையிலும் அசைவத்தை அவர்கள் உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். நியூட்டிரசன் தெரிந்து உணவு எடுத்துக் கொள்ளாமல் சுவைக்காக உணவு எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை விட்டு நாம் வெளியே வரவேண்டும்.
இடர்பாடுகள் வரும்பொழுது செய்யும் தொழிலில் சோர்வடைபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
இடர்பாடுகள் வந்தால்தான் வெற்றியை பெரிதாகச் சாதிக்க முடியும். தடைக்கல்லை படிக்கல்லாக்கி வெற்றியைக் காணும் மன நிலையை உருவாக்கி கொள்ள வேண்டும். தடைகள் வரும்போது, செய்யும் தொழிலில் நம்மை அறியாமல் இருந்திருக்கிற குறைகளைக் களைந்து நிறைகளை அதிகம் புகுத்திக்கொள்ள முடியும்.
“வெற்றி நமக்கு உலகின் ஒரு புறத்தையே காட்டும். தோல்வி அதன் மறுபுறத்தையும் உணர வைக்கும்” என்பதை உணர்ந்து எதையும் ஏற்று செயலாற்றினால் இடர் பாடுகளும் நமக்கு இன்பம் தான். துவண்டு போகிற மனநிலையிலும் சாதிக்கக்கூடிய மனநிலையை பெற்றவராக இருத்தல் வேண்டும். இந்த மனநிலையை உருவாக்கிக் கொண்டால் இடர்பாடுகள் எல்லாம் இன்பங்களுக்கான வழியாகிவிடும்.
உடுமலைப்பேட்டை, பூலாங்கிணர் சடையப்பாளையம் திரு. S.K.S. கந்தசாமி, B. Com. அவர்கள் புவுல்ட்ரி நிறுவனங்கள் குறித்து கூறியதாவது…
நான் சுகுணா பிராய்லர் நிறுவனத்துடன் ஆரம்ப நாட்களிலிருந்து சேர்ந்து கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஆரம்ப காலங்களில் நடந்து சென்றும், சைக்கிளில் சென்றும் பணியாற்றினோம். எந்தப் பணியை செய்தாலும் சரியாக, மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதே எங்களது உழைப்பின் தாரக மந்திரமாகும்.
சில கால கட்டங்களில், கோழி வளர்ப்பில் இருந்த போது முட்டைவிலை குறைந்தும் தீவனங்களின் விலை அதிகமாகியும் விடும். அந்ந சூழ்நிலைகளில் மிகுந்த ஈடுபாட்டுடனும், தொழிலில் கொண்ட பக்தியாலும் பணியாற்றியதால் உயர்ந்த நிலையை அடைந்துள்ளோம். கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு சுகுணா நிறுவனமானது தீவனங்கள் விநியோகம், பல்வேறு தொழில் ரீதியான வங்கிக் கடன்கள் போன்ற வசதிகளை செய்து தந்து எங்களைப் போன்ற பண்ணையாளர்களுக்கு ஊக்கம் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி…
மேலும் கோழிப்பண்ணை சார்ந்த பல்வேறு கருத்தரங்குகளுக்கு தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்கள், பல்வேறு அயல்நாடுகள் சென்று தொழில்நுட்பங்களை கற்று அதனை செயல்படுத்தி வருகிறோம்.
கோழிப்பண்ணை வளர்ப்பில் இன்றைக்கு சுகுணா நிறுவனத்துடன் இணைந்து சிறப்புத் தகுதி நிலையை அடைந்துள்ளோம். மிக்க மகிழ்ச்சி… வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment