Wednesday, March 16, 2016

புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பு பொதுவாக குறைந்த முதலீட்டில் சிறு மற்றும் குறு விவசாயிகள் செய்யும் வண்ணம் உள்ளது. கோழி வளர்ப்பதில் கூரை போடுவதே மிகுந்த செலவு பிடிக்கும் செயலாகும். ஆனால் புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு முறையில் கூரை தேவைப்படாது.

வலை தயாரிப்பு

15 அடி அகலம், 30 அடி நீளம், 6 அடி உயரம் கொண்ட வலையினை அடிக்க வேண்டும். மேல் கூரை போடத்தேவையில்லை. இந்த வலையை ஒட்டி, ஆடுகள் சாப்பிடக்கூடிய அகத்தி, சூபாபுல், முள்முருங்கை, கிளிரிசிடியா, சித்தகத்தி, வாகை, வாதார காய்ச்சி, வெவ்வேல் மரங்களை நடவு செய்யலாம். அதனோடு வருமானம் தரக்கூடிய கருவேப்பிலை, பப்பாளி, மருதாணி மரங்களையும் வைக்கலாம். வலைக்குள் 3 கொடாப்புகள் அமைக்க வேண்டும். அவற்றை அமைக்கும் முறை மற்றும் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கொடாப்பு (1) - படுக்கையறை

மழை, வெயில் நேரத்தில் பாதுகாப்பிற்கும், இரவில் தூங்குவதற்கும் ஒரு கூண்டு அடிக்க வேண்டும். வலையடித்த இடத்தில் ஒரு மூலையில் 3 அடி அகலம், 3 அடி உயரம், 3 அடி நீளம் கொண்ட கொடாப்பு போல் அந்த கூண்டு இருக்க வேண்டும். பழைய மரப்பலகைகளை வாங்கி, கழிவு எண்ணெயில் ஊற வைத்து பயன்படுத்தலாம். அல்லது தார் ஷீட்டைக் கொண்டு அப்படியே குச்சி மேல் போட்டாலும் போதும். அடிக்கடி மாற்ற நேரிடுவதால் தென்னங்கீற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

3 comments:

  1. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete
  2. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete
  3. Kozhipannai. Amekkauilan, anaku
    Maniyathil

    ReplyDelete