Saturday, March 5, 2016

அடைகாத்தல்

வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பி விடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்பதற்கு அவசியம். அடைக்காப்பானினுள் வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 டிகிரி செல்சியஸிலிருந்து 100.5 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட் (37.2 டிகிரி செ – 37.8 டிகிரி செ) வரை குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும் போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.
ஈரப்பதம் ஒரு முக்கியக் காரணி. உலர்ந்த அல்லது ஈரப்பதமுள்ள வெப்பநிலைமானிக் கொண்டு ஈரப்பதத்தை அளக்கலாம். முட்டைப் பொரிக்க 21 நாட்கள் ஆகும். முதல் 18 நாட்களில் ஈரப்பதம் 60 சதவிகிதமும் பின்பு 3 நாட்களுக்கு 70 சதவிகிதமும் இருந்தால் தான் முட்டைகள் குஞ்சுகள் பொரிக்கும். செலுத்தப்பட்ட அடைக்காப்பான் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதம் குறையும்.
கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். கூரிய முனைப்பகுதியை மேலே இருக்குமாறு வைத்தால குஞ்சுகளின் தலைக் குறுகிய முனைப்பகுதியில் உருவாக்குவதால் பொரிக்கும் திறன் குறையும். முட்டையைத் திருப்பி விடுவது பொரிக்கும் திறனை அதிகப்படுத்தும். கைகளால் திருப்பினால் நாளொன்றுக்கு 4 முறை திருப்பவேண்டும். இப்போது நவீன அடைக்காப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முட்டைத்  தட்டுகள் 90 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 நாட்களுக்குப் பின் எந்த ஒரு திருப்புதலும் தேவைப்படாது.
poltry_egg_incubator
அடைகாத்தல்
முட்டைப் பொரிக்கும் திறனை அதிகப்படுத்த வெவ்வேறு பொரிப்பான்களைப் பயன்படுத்தலாம். தனித்தனி பொரிப்பான்களைப் பயன்படுத்தும் போது 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரப்பதம் 70-80 சதவீதமும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தப்படுத்துதல், கிருமி நீக்கம் மற்றும் பிற முட்டைகளைப் பாதிக்காமல் புகை போடுதல் போன்றவற்றைச் செய்வது எளிது.

No comments:

Post a Comment