Saturday, March 5, 2016

இனவிருத்திக் கோழிகள் பராமரிப்பு

இக்கோழிகள் குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெருவாரியான முட்டைகளில் இருந்து நல்லக் குஞ்சுகளைப் பெறவேண்டுமெனில் முறையான பராமரிப்பு அவசியம். இனச்சேர்க்கைக்கென தனியாக சேவல்கள் வளர்க்கப்படவேண்டும். இவ்வாறு இனச்சேர்க்கை சேவல்களை எடைக் குறைந்த இனங்களுக்கு சேவல்,பெட்டைக் கோழிகள் விகிதம் 1:10 என்றும் எடை மிகுந்த இனங்களுக்கு 1:8 என்றும் இருக்குமாறு 20வது வாரத்தில் விடவேண்டும். 24வது வாரத்திலிருந்து முட்டைகளை சேகரித்துக் கொள்ளலாம். புல்லோரம் கழிச்சல் நோய் மற்றும் மைக்கோபிளாஸ்மாசிஸ் போன்ற நோய்கள் தாக்காமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
கோழிகளின் ஆரோக்கியத்திற்கும், அதிகமாகக் பொரிக்கும் திறனுக்கும் நன்கு சுத்தமான உலர்ந்த கூளங்களைப் பயன்படுத்துதல் அவசியம். அடைக்காக்க வைக்கப்படும் முட்டைகள் புதிதாக இடப்பட்டவையாகவும், ஓடுகள் தரமாகவும் (கெட்டியாகவும்) இருக்கவேண்டும். 5 கோழிகளுக்கு ஒரு கூடு என்ற அளவில் கூடுகள் தேவைப்படும்.

No comments:

Post a Comment