Saturday, March 5, 2016

விலங்குப் புரதங்கள்

1.இரத்தத் துகள்
இதில் 80 சதம் புரதமும், லைசின், அர்ஜினைன், மெத்தியோனைன், சிஸ்டைன் மற்றும் லியூசின் போன்ற அமினோ அமிலங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஐசோலியூசின் மட்டுமே இருப்பதில்லை. இதன் சுவைக் குறைவாக இருக்கும். 2-3 சதவீதம் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

2.கல்லீரல் கழிவுத் துகள்

லைசின், மெத்தியோனைன், சிஸ்டைன், டிரைப்டோபன் மற்றும் அதிக அளவு ரிபோஃபிளேவின், கோலைன் மற்றும் விட்டமின் பி12.

3.பட்டுப்பூச்சியின் கூட்டுப்புழுக் கழிவு

எண்ணெய் நீக்கப்பட்ட கூட்டுப்புழுவின் கழிவில் புரதம் மிகுந்துள்ளது. அதிக நார்ச்சத்து உள்ளதாலும் இதன் புரதம் செரிப்பதற்குக் கடினமாக இருப்பதாலும் இதன் பயன்பாடு கோழித்தீவனத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

4.அடைகாப்பகத்தின் கழிவுகள்

குஞ்சு பொரிக்காத முட்டைகள், கொல்லப்பட்ட குஞ்சுகள், இறந்த சினைக்குஞ்சுகள், இளம் கருக்கள் போன்றவற்றைச் சேகரித்து வேக வைத்து, அரைத்து கொழுப்பு நீக்கியோ அல்லது நீக்காமலோ கோழிகளுக்கு அளிக்கலாம். பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்து 25-34 சதவிகிதம் பண்படா புரதத்தைப் பெற்றிருக்கும்.

5.இறகுத் துகள்கள்

80-85 சதவிகிதம் புரதம் அடங்கியுள்ளதால் இதைத் தீவனத்தில் 5 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

6.கோழிப்பண்ணைக் கழிவுகள்

கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைக் கழிவுகளின் 15 சதவிகிதம சாம்பல் சத்து இருக்கும். இதில் புரதம் 55-60 சதமும் கொழுப்பு 12 சதமும் இருக்கும்.

7.இறைச்சி மற்றும் எலும்புத் துகள்

இதில் அதிகப் புரதம் மட்டுமன்றி கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் அதிகம் அடங்கியுள்ளன. துகள்களில் அடங்கியுள்ள ஜெலாட்டின் அளவைப் பொறுத்து அதன் ஊட்டச்சத்துக் கலவை மாறுபடும். 5-10 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment