Saturday, March 5, 2016

காய்கறிப் புரதங்கள்

1.கடுகுப் புண்ணாக்கு
இரு கடலைப் புண்ணாக்கைக் காட்டிலும் புரதம் மற்றும் லைசின் அளவு மிகுந்துள்ளது. எனினும் கிளைக்கோசைட்ஸ் மற்றும் காய்ட்டிரோஜன் உள்ளதால் இதைப் பதப்படுத்தினாலும் 5 சதவிகிதம் பயன்படுத்தக்கூடாது.
2.சோயாபீன் தூள்
சோயாபீனில் 35-40 சதவிகிதம் புரதமும், 18-21 சதவிகிதம் கொழுப்பும் உள்ளது. எண்ணெய் எடுக்க பல முறைகள் உள்ளன. சோயாபீன் எண்ணெய் பிழிந்து எடுக்கும் போது கிடைக்கும் தூளில் 42 சதவிகிதம் புரதமும் 5 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. சரியான சூடுபடுத்தும் முறை மூலம் இதன் புரதத்தன்மையை உயர்த்தலாம். சோயாபீனானது உயர் இரக புரதத்தைக் கொண்டுள்ளது. இதிலிருந்து லைசின் அர்ஜினைன், கிளைசின், டிரைப்டோபன், சிஸ்டைன் போன்ற அமினோ அமிலங்களைப் பெறலாம்.

3.எள்துகள்

இதில் அர்ஜினைன், மெத்தியோனைன் மற்றும் டிரைப்டோபன் போன்ற அமினோ அமிலங்களும் புரதமும் அதிக அளவில் உள்ளது.

4.கொத்தவரை

கொத்தவரையிலிருந்து தாவரக் கோந்து தயாரிக்கும் போது கிடைக்கும் உபபொருளில் புரோட்டீன் மிகுதியாக உள்ளது. இதில் டிரிப்சின் தடுப்பான் இருப்பதால் சிறிதளவே பயன்படுத்தவேண்டும்.

5.சூரியகாந்தி விதைத் தூள்

நிலக்கடரைத் தூளை விட இதில் ஊட்டச்த்துக்கள் அதிகம். எனினும் இதன் அதிக நார்ச்சத்தால் இது கோழித்தீவனத்தில் சேர்க்கப்படுவதில்லை. சோயாபீனை விட இதில் மெத்தியோனைன் மற்றும் அர்ஜினைன் அதிகமுள்ளது. லைசின் மிகக் குறைவு. மேலும் இது பாண்டதொனிக் அமிலம் மற்றும் நியாசினுக்குச் சிறந்த ஆதாரம்.

6.செந்தூரகத்தூள்

இதுவும் நிலக்கடலைத் தூளுக்குப் பதிலாக 25 சதவிகிதம் வரை பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகமாகப் பயன்படுத்தினால்  லைசின் பற்றாக்குறை ஏற்படும்.

7.ராம்டில் புண்ணாக்கு

கோழிக்குஞ்சுகளுக்கும், முட்டைக் கோழிகளுக்கும் தீவனமாக 50-100 சதவிகிதம் வரை இவை பயன்படுத்தப்படுகின்றன.

8.பருத்திப் புண்ணாக்கு

புரதம் அதிக அளவில் இருந்தாலும் லைசின் அளவு குறைவாகவே இருக்கும். 15 சதவிகிதம் வரை இப்புண்ணாக்கைப் பயன்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தினால் முட்டையின் மஞ்சள் கருவில் சிறு கட்டி போன்று தோன்றும்.

9.சோளம் குளூட்டன் துகள்கள்

சோள மாவுத் தொழிற்சாலையின் உபபொருளான இதில் புரோட்டீன், சாந்தோஃபில் நிறைந்துள்ளது.

10.பெனிசிலியம்-மைசிலியம் கழிவுகள்

இது பென்சிலின் தயாரிப்பில் வெளிவரும் கழிவு ஆகும். இதில் புரதம் மற்றும் எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளதால் 5  சதம் வரை கலப்புத்  தீவனத்தில் பயன்படுத்தலாம்.

11.ஆளிவிதைத் துகள்கள்

இதில் டிரைப்டோபன் நிறைந்துள்ளது எனினும் சையனோஜெனிக் கிளைக்கோஸைடு மற்றும் ஏன்டிபைரிடாக்ஸியல் காரணிகள் நிறைந்துள்ளதால் 5 சதவிகிதம் மேல் உபயோகிக்கக்கூடாது. இதை வேக வைத்துக் கொடுப்பதால் விஷத்தன்மை குறையும்.

No comments:

Post a Comment